ருதுராஜ்க்கு பதில் துருவ் ஜூரல்.. காரணம் இந்த ஒரே ஒரு வார்த்தை தான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
105

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 தொடரில் துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டார். அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அறியப்படும் அவர், கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. இதனால் பலரும் அணியில் அவருக்கான இடம் குறித்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலாக ருதுராஜ் அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, துருவ் ஜூரல் எதனால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

ஒரு வார்த்தை தான் காரணம்:

இது குறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட் கீப்பர் என்பவர் ஒருவர் தேவை. இதன் காரணமாகத்தான் துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏனென்றால் இது 5 t20 போட்டிகள் கொண்ட தொடராகும். சஞ்சு சான்சனுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் உங்களுக்கு இரண்டாவது விக்கெட் கீப்பர் தேவை”.

“அது மட்டுமில்லாமல் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டதற்கு ஒரே ஒரு வார்த்தை தான் காரணம். அதற்கு காரணம் அவருடைய திறன் மட்டும் தான். இதனால் அவர் தொடர்பான கேள்விகள் குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன். சில சமயம் வீரர்களை ஒப்பிட்டு பல கேள்விகள் கேட்கப்படலாம்.ஆனால் தேர்வு குழுவினர் என்பவர் ஒருவரிடம் திறமை இருக்கிறதா என்பதை பார்த்து தான் அவர்களை தேர்வு செய்வார்கள்”.

- Advertisement -

“சில சமயம் நாம் நம் தைரியமான முடிவை எடுக்க வேண்டும். இதன் காரணமாக சில சமயம் நாம் விமர்சனத்திற்கு உள்ளாகலாம். இதே, துருவ்  ஜுரல்தான் ரஞ்சி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அளவுக்கான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்”.

நம்பர்கள் தாண்டி முடிவு தேவை:

“அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். அண்மைக்காலமாக அவர் பெரிய அளவில் பேட்டிங்கில் ரன் சேர்க்கவில்லை என்பதில் சந்தேகம் இல்லை.  அவருடைய டி20 ஸ்கோர்களை கூட எடுத்துப் பாருங்கள். ஐபிஎல் ஆக இருக்கட்டும் சையது முஸ்தாக் அலி தொடராகவும் இருக்கட்டும், சமீப காலமாக பெரிய அளவில் செயல்பாடு இல்லை”.

“இருப்பினும் சில சமயம் நம்பர்களையும் தாண்டி தான் தேர்வுக்குழுவினர் ஒரு முடிவை எடுப்பார்கள். நீங்கள் நம்பர்களை வைத்துதான் வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மோகன்தாஸ் மேனன் போன்ற தரவுகளை தேடும் நபர் அதை வைத்து ஒரு அணியை உருவாக்குவார்”.

“ஆனால் அஜித் அகார்கர் போன்ற டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தான் வீரர்களின் திறமையை வைத்து அணியைத் தேர்வு செய்வார்கள். எனினும் ருதுராஜ் தான் இந்திய அணியில் மூன்றாவது தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம்” என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -