இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மிகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் இருவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. மேலும் வாய்ப்புக்காக இந்திய கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் இருவரையும் விலக்கி வைக்கும் இடத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வந்திருக்கிறது.
நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி தனது முதல் தொடரில் விளையாட இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபிக்கான மும்பை அணி உடன் இணைந்து பயிற்சி செய்ததோடு, ரஞ்சி தொடரிலும் விளையாட இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்திருக்கின்றன.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் அவர் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட் வந்து விளையாடுவது குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பல விஷயங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கிரிக்கெட் எதிர்காலம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : 25 பந்துகள் மீதம்.. சூப்பர் கிங்ஸ் வெற்றியை பறித்த எம்ஐ வீரர்.. 61 ரன் எடுத்த டூபிளசிஸ் அதிரடி வீண்.. முழு விபரம்
“சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நல்ல முறையில் விளையாடியிருக்கிறார்கள். எனவே இவர்கள் இருவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து நமக்கு மதிப்பீடு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்ததும் இது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது நாங்கள் ஒரு தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” என்று கூறியிருக்கிறார்.