தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 13வது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் மோதி விளையாடின.
இதில் எம்ஐ கேப்டவுன் அணி 25 பந்துகள் மீதம் வைத்து சிறப்பான வெற்றியை ருசித்து இருக்கிறது.
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர்
நேற்று இரவு கேப்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கான்வெ மற்றும் டு பிளசிஸ் ஜோடி தொடக்க விக்கட்டுக்கு 10.6 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. இதில் காண்வே 31 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பௌண்டரிகளோடு 34 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் 38 பந்துகளை எதிர் கொண்டு 6 போர் 3 சிக்ஸ் என 61 ரன்கள் குவித்தார்.
அதற்கு பின்னர் களம் இறங்கிய டுப்ளாய் 5 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ 27 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸ் என 43 ரன்கள் குவித்தார். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் எம்ஐ வீரர் ஹென்றிக்ஸ் இரண்டு ஓவர்களில் 7 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
எம்ஐ அணி அதிரடி வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி எம்மை அணி களம் இறங்கியது. இதில் துவக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன் மற்றும் வான்டர்டசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 6.4 ஓவர்களில் 70 ரன்கள் குவித்தது. இதில் வான்டர்டசன் 24 வந்துகளில் 4 போர் ஒரு சிக்ஸ் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 39 பந்துகளில் 8 போர் மற்றும் 6 சிக்ஸ் என 89 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதையும் படிங்க:சாம்சனை விட பண்ட் சிறந்தவர் அல்ல.. ஆனா ரிஷப் பண்ட் அணியில் எடுக்க இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் பேட்டி
மேலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய ரிசா ஹென்றிக்ஸ் 28 பந்துகளின் 34 ரன்கள் எடுக்க, எம்ஐ அணி 15.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. இதனால் 25 பந்துகள் மீதம் வைத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எம்ஐ அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதில் 89 ரன்கள் குவித்த ரிக்கல்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.