சிஎஸ்கேவுக்கு அடிச்ச அடி பிசிசிஐ-க்கு கேட்ருச்சு! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய அணி அறிவிப்பு! – மீண்டும் டெஸ்ட் அணியின் ரகானே-க்கு இடம்!

0
5043

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ரகானே. 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

2021-2023ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். அந்த வகையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வருகிற ஜூன் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி இருதினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ மீது தொடர்ந்து கேள்விகள் எழுந்துவந்தன. இந்நிலையில் இன்று 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், அவர் பைனலுக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் அஜிங்கியா ரகானே மீண்டும் இந்திய அணிக்குள் எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் வரிசையில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், சித்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி அஜின்கியா ரகானே, கேஎல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். விக்கெட் கீப்பர் இடத்திற்கு கேஎஸ் பரத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய மூவரும் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் சர்துல் தாக்கூர் மட்டுமே இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சு வரிசையில் முகமது சிராஜ், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இருக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி

ரோகித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், கேஎல் ராகுல், விராட் கோலி, அஜின்கியா ரகானே, சித்தேஸ்வர் புஜாரா, கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், சர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்