இந்திய அணிக்கு பங்களாதேஷ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று மோதியது. இந்த போட்டியில் அரைசதம் அடித்து களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் சாதாரணமான ஷார்ட் பந்து ஒன்றில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அறிவுரை கூறியிருக்கிறார்.
இன்று இந்திய பேட்டிங் யூனிட்டில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் எல்லோருமே கைவிட்ட நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் காப்பாற்றினார்கள். இந்திய பேட்டிங் யூனிட்டில் சிறப்பாக விளையாடிய ஒரே பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவரிடம் ஒரு முக்கியமான பேட்டிங் பிரச்சனை இருப்பதாக அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
ஜெய்ஸ்வால் போராடினார் என்பதில் சந்தேகம் இல்லை
இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் இருந்தே போராடினார். பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்கள் போராட வைத்தார்கள். பின்னர் அவர் ஆட்டம் இழக்கும் போது ஷார்ட் பந்தில் சிக்கினார். அவர் உயரத்திற்கு மேலே இருந்த ஷார்ட் பந்தில் அவருக்கு பிரச்சனை இல்லை. அவருக்கு வயிறு அளவுக்கு இருக்கும் ஷார்ட் பந்தில்சிரமம் இருக்கிறது. ஆனால் இப்படியான பந்துகள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் எளிதானது”
“ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்டார். ஆனாலும் கூட அனைவருமே அப்படியான பந்துகளுக்கு கஷ்டப்படவே செய்தார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களுக்கும் கூட சிரமங்கள் இருந்தது. ஆனால் இறுதியில் அவர் ஆட்டம் இழந்த விதம் சரியானதாக இல்லை. அனலைசர்கள் அவருக்கு இதை காட்டுவார்கள். மேலும் இப்படியான பந்தில் போராடியவர்களை நான் பார்த்தது கிடையாது”
ஜெய்ஸ்வால் மனம் கூட பிரச்சினையாக இருக்கலாம்
மேலும் அஜய் ஜடேஜா கூறும் பொழுது “புல் ஷாட் மற்றும் ஷார்ட் பந்துகளில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சிரமங்கள் இருக்க செய்கிறது. ஆனால் இடுப்பு உயரத்திற்கு மட்டுமே இருக்கும் பந்துகளுக்கு எல்லோருமே வழிகளை கண்டுபிடித்து விளையாடுவார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் சாதாரண பந்துக்கு விளையாட முடியாத அரிய காட்சியை நாம் பார்க்கிறோம்”
இதையும் படிங்க: இனி கட்டாயம்.. மேட்ச் முடிவில் தானே இறங்கிய கம்பீர்.. ரோகித் சர்மா கில் யாரும் விதிவிலக்கு இல்லை
“இதற்கு காரணம் மனமாக கூட இருக்கலாம் இல்லையென்றால் விளையாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.உங்கள் ஆட்டத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது அந்த பந்துக்கு நீங்கள் ஷாட் ஆடிக் கொண்டிருப்பீர்கள். இப்பொழுது அந்த பந்துக்கு ஷாட் ஆடக்கூடாது என்பதுதான் உங்களுடைய எண்ணமாக இருக்கிறது. மனம் இப்படி முடிவு செய்து விடுவதால், அந்தப் பந்தை தடுத்து விளையாடுவது கடினமாக மாறுகிறது” என்று கூறியிருக்கிறார்.