அபிஷேக் ஷர்மா அதிரடியா ஆடலாம்.. ஆனா இதற்கான விதை அவர் போட்டது.. அவர்தான் எல்லாமே மாற்றினார் – அஜய் ஜடேஜா

0
126

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறைக்கு முக்கியமான நபர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 8 நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை எந்த சமரசமும் இன்றி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் பாணியை இந்திய வீரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, எந்த வகையான பந்துவீச்சாளராக இருந்தாலும் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடி எதிரணிக்கு பயத்தை உருவாக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணி இப்படி அதிரடியாக விளையாட ஆரம்பித்ததற்கு மிக முக்கிய காரணமாக அஜய் ஜடேஜா ரோஹித் சர்மாவை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் ஆரம்பித்த பழக்கம் இப்போது இளம் வீரர்கள் அந்த ஆட்ட முறையை பின்பற்றி விளையாட வருகிறார்கள் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக இருக்கிறார். நான் கூற வருவது என்னவென்றால், அவரது வெற்றியில் முழு அணியும் ஒரு பங்கை கொண்டுள்ளது. ஏனென்றால் நாங்கள் இந்த முறையில் விளையாடுகிறோம் என்பதை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது ரோஹித் சர்மா இல்லை, ஆனால் அவர் இந்த பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க:யுஏஇ உடன் ஆட வராமல் ஆட்டம் காட்டிய பாகிஸ்தான்.. இறுதியில் ஏற்பட்ட சமாதானம் – என்ன நடந்தது?

இல்லையென்றால் 2 வருடங்களுக்கு முன்பு அல்லது 6 வருடங்களுக்கு முன்பு அல்லது 10 வருடங்களுக்கு முன்பு கூட அவர் அவுட் ஆன விதத்தை பார்த்தால் எதற்காக அவுட் ஆகி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். 30 ரன்கள் எடுத்திருந்த போதும் அடிக்க தேடி போய் அவுட்டான விதத்தை தான் நாம் பார்த்திருப்போம். அவர் பெறுகிற தன்னம்பிக்கை மற்றும் அணியின் ஆட்ட பாணியை பாராட்டுவது, மேலும் அணியின் எட்டாவது பேட்டர் இந்த முறையில் பேட்டிங் செய்ய அனுமதிப்பது முக்கியமான விஷயங்கள் ஆகும்” என்று ஜடேஜா பேசியிருக்கிறார்.

- Advertisement -