ரிஷப் பண்ட் வாயால சொல்றாரு.. ஆனா ஜெய்ஸ்வால் அந்த விஷயத்தை பேட்டால செய்றாரு – அஜய் ஜடேஜா பிரமிப்பு

0
492
Jaiswal

இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் எதிரணி ஃபீல்டிங் உடன் விளையாடினார் என அஜய் ஜடேஜா பாராட்டி இருக்கிறார்.

இன்று இந்திய அணி வெறும் 34.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு ஓவருக்கு 8.22 ரன்கள் வீதம் எடுத்து இந்திய அணி உலக சாதனையும் படைத்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் காட்டிய பாசிட்டிவ்

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே அதிரடியாக ஆரம்பித்தார்கள். இதில் ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று 52 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் குவித்தார். அவர் காட்டிய அதிரடி ஒட்டுமொத்த அனைத்து தொற்றிக் கொண்டது என்று கூறலாம்.

இது குறித்து அஜய் ஜடேஜா கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் இடமிருந்து இதை பார்த்து நாங்கள் பழகி விட்டோம். ஏனென்றால் அவர் தினசரி இதையே செய்கிறார். ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடித்து சிறப்பாக எல்லாம் செய்து அசத்தினார். ஆனால் ஜெய்ஸ்வால் வந்ததிலிருந்து ஆதிக்கம் செலுத்தினார். அது இங்கிலாந்தாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவருடைய பாசிட்டிவ் அணுகுமுறை மொத்த அணியிடமும் பார்க்க முடிந்தது”

- Advertisement -

ரிஷப் பண்ட் சொன்னதை ஜெய்ஸ்வால் செய்தார்

மேலும் பேசிய அஜய் ஜடேஜா “அவருடைய சிறப்பு என்னவென்றால் அவர் இன்று எதிரணி கேப்டன் உடன் விளையாடினார். ரிஷப் பண்ட் பேசுவதின் மூலம் பீல்டர்களை மாற்றி நிற்க வைக்கிறார். ஆனால் ஜெய்ஸ்வால் அதையே தனது பேட் மூலம் செய்கிறார். குறிப்பாக டீப் பாயிண்ட் பீல்டரை ஸ்கொயர் ஆக வைக்கும் பொழுது ஜெய்ஸ்வால் நேராக அடிக்கிறார்.அவர் இன்று தனது இன்னிங்ஸ் முழுவதும் இப்படி எதிரணி பீல்டிங் உடன் விளையாடினார்”

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் கடைசி நாள்.. நாளை மழை பெய்யுமா.?. ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெற்றியை நோக்கி இந்திய அணி

“இன்று இந்திய அணியில் எல்லோருமே பங்களித்தார்கள். அதன் காரணமாகத்தான் இந்திய அணி இன்று இந்த நிலைமையில் நிற்கிறது. இதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்வேன். ஒட்டுமொத்த அணியும் தீவிரம் காட்டி விளையாடியது. ஆனால் நமக்கு ஒரு பிளாஸ்டர் பேட்ஸ்மேன் வேண்டும். அதுதான் ஜெய்ஸ்வால்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -