கம்பீருக்கு எல்லாரும் அநீதி செஞ்சிங்க.. இப்ப அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கு – அஜய் ஜடேஜா விமர்சனம்

0
406
Ajay

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பரை தோல்விகளின் போது மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு அவருக்கு அநீதி செய்து விட்டதாக அதே ஜடேஜா விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமான முறையில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இது கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பில் மற்றவர்கள் அனுபவிப்பதற்கான நேரம் என அதே ஜடேஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் பற்றி பரவிய விமர்சனம்

கம்பீர் பயிற்சியில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி இடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. மேலும் 46 ரன்னில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஆல் அவுட் ஆகி, ஆசியாவில் ஆசிய அணி எடுத்த குறைந்த டெஸ்ட் ஸ்கோர் ஆக மோசமான சாதனை படைத்தது.

மேலும் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து நியூசிலாந்து அணி இடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இத்தோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட் வாஸ் முறையில் முதல் முறையாக இந்திய அணி இழந்தது. இப்படி அடுத்தடுத்து கம்பீர் பயிற்சியில் இந்திய அணி மோசமான சாதனைகளை செய்ததால், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீருக்கு இழைக்கப்பட்ட அநீதி

இதுகுறித்து பேசி இருக்கும் அஜய் ஜடேஜா கூறும்பொழுது ” நீங்கள் கம்பீருக்கு அநீதி இழைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அணியின் வெற்றி தோல்வியில் பயிற்சியாளர் பங்கின் அடிப்படையில் விமர்சிக்க முடியாது என்றாலும், அவரை ஆறு மாதத்திற்குள் மதிப்பிட்டு விமர்சிப்பீர்கள் என்றால் அது சரியானதாக இருக்காது. நீங்கள் ஒரு பெர்ஃபார்மன்ஸ் மூலம் ஒருவரை தீர்மானித்து விட முடியாது. இது அவரை நாம் என்ஜாய் செய்ய வேண்டிய நேரம்”

இதையும் படிங்க : ஸ்மித் லபுசேன்.. நீங்க ரெண்டு பேரும் விராட் செஞ்ச இதை செய்யுங்க.. செமையா திரும்பி வரலாம் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

“சில கட்டங்கள் உள்ளது. உங்களுக்கு வெற்றிகள் வரலாம் தோல்விகளும் வரலாம். எனவே நான் வெறும் ஆறு மாதத்தின் அடிப்படையில் கம்பீரை விமர்சனம் செய்யும் இடத்திற்கு செல்ல மாட்டேன். அவர் கடந்த காலங்களில் எதை சரியாக செய்ய வேண்டும் என்பதை செய்திருக்கிறார். அவர் மிகவும் தெளிவான நபராக இருந்திருக்கிறார். எனவே நீங்கள் எப்போது அவரிடம் என்ன வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?” என்று விமர்சித்திருக்கிறார்.

- Advertisement -