இந்திய அணி ஜெயிக்காததுக்கு காரணம்.. கம்பீர் எடுத்த அந்த ஒரு முடிவுதான் – அஜய் ஜடேஜா விமர்சனம்

0
559
Gambhir

இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் போட்டியை வெல்லும் இடத்திற்கு வந்து ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து போட்டியை டை செய்தது. இதற்கு கம்பீர் மேற்கொண்டு வரும் புதிய பரிசோதனைதான் காரணம் என அதே ஜடேஜா மற்றும் சபா கரீம் இருவரும் கூறி இருக்கிறார்கள்.

நேற்று இலங்கை அணி 180 ரன்கள் எடுப்பதே பெரியகாரியம் என்கின்ற நிலைமை இருந்தது. போட்டி இந்தியாவின் கைகளில் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்படியான நிலையில் திடீரென ஆட்டத்தின் 32 வது ஓவரில் சுப்மன் கில் பந்து வீச கொண்டுவரப்பட்டார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 14 ரன்கள் சென்றது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் ரன் ஏதும் இல்லாமல் இலங்கை அணி மிகவும் தடுமாறி வந்தது. அந்த ரன் அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக சென்று இருந்தால் அடுத்த இரண்டு ஓவர்களில் விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவதற்கான வாய்ப்பில் இருக்க வேண்டும் என்று கம்பீர் விரும்புவதால், சுப்மன் கில் பந்து வீச கொண்டுவரப்பட்டார். ஆட்டம் மாறிய தருணமாக அஜய் ஜடேஜா மற்றும் சபா கரீம் இதை பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறும்பொழுது “டி20 போட்டியில் ரங்கோசிங் பந்து வீச வந்த பொழுது அதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் இந்தியா அப்போது தோல்விக்கு அருகில் இருந்தது. ஆனால் நேற்று இந்திய அணியின் கைகளில் போட்டியிருந்தது. அப்படியான நேரத்தில் எந்த பரிசோதனை முயற்சிகளையும் செய்ய வேண்டிய தேவை கிடையாது. தொடர்ந்து சென்று அவர்களை இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும். பரிசோதனை முயற்சிகள் செய்ய வேண்டும் என்றால் ஆட்டம் நம் கையில் இல்லாத பொழுது அல்லது தோல்வியில் இருக்கும் பொழுது செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி உடன் உரையாடிய சபா கரீம் கூறும் பொழுது “இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்து வீசும் முடிவை எடுத்ததை டி20 தொடரில் சூரியகுமார் செய்த சிந்தனை போலவே இருந்தது. அந்தத் தொடரில் ரிங்கு சிங், ரியான் பராக் ஆகியோரை சூரியகுமார் பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். இங்கு கில் பந்துவீச்சுக்கு கொண்டுவரப்பட்டது ஆட்டத்தின் வேகம் கை மாறி இலங்கை பக்கம் செல்லும்படி ஆகிவிட்டது.

இதையும் படிங்க : இது கம்பீர் காலம்.. நேத்து நடந்த அந்தவொரு சம்பவம்.. இனி தொடர்ந்து நடக்கும் – பவுலிங் கோச் சாய்ராஜ் பஹதுலே பேட்டி

இந்த மைதானத்தில் இந்தியாவுக்கு கூடுதல் சுழல் பந்துவீச்சு விருப்பங்கள் தேவை. கண்டிஷன் ஒத்துழைப்பு இருந்தால் நேற்று நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய சிவம் துபே தொடர்ந்து பந்து வீசவைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வழியில் செல்லாத காரணத்தினால் கில் பந்து வீச வைக்கப்பட்டார். ஆனால் அந்த முயற்சி சரியானது என்று நிருபிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -