ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு முக்கிய காரணமாக வெற்றிக்கு செயல்பட்ட ரஷித் கான் இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறந்த முறையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அபாரமாக விளையாடி 110 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 105 ரன்கள் விளாசினார்.
மேலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய ரஹ்மத் 50 ரன்கள், அஹ்மத்துல்லா 86 ரன்களும் குவித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய ரண்களை ஆப்கானிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்தது. அதற்குப் பிறகு இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு 13 ஓவர்களில் 73 ரன்கள் குவித்திருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் பவுமா 38 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜி 31 ரன்களும் அதற்குப் பிறகு களம் இறங்கியவர்களில் மார்க்ரம் மட்டுமே ஓரளவு விளையாடி 21 ரன்கள் குவித்தார்.
இன்னும் மற்ற அனைவரும் குறைந்த ரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணித்தரப்பில் ரசித் கான் ஒன்பது ஓவரில் பந்து வீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் தென் ஆப்பிரிக்கா பறிகொடுத்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடிப்படையில் பெற்ற மிக பெரிய வெற்றியாக இது அமைந்திருக்கிறது. 177 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு 154 ரன்கள் வித்தியாசத்திலும் அதற்கு முன்னர் 146 ரன்கள் வித்தியாசத்திலும் இதே சார்ஜாவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க:கேப்டனா ஹாரி புரூக் மோசமா பேசி இருக்கார்.. இதுக்காக நிச்சயம் வருத்தப்படுவார் – அலைஸ்டர் குக் விமர்சனம்
2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 142 ரன்கள் வித்தியாசத்திலும், 2017 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக 138 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதே ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச வெற்றிகளாக அமைந்திருக்கிறது.