“அணியில் எல்லாம் இடம் தர முடியாது; என் பக்கத்து இருக்கையில் வேண்டுமானால் இடம் தரலாம்” – ஜடேஜா தமிழக வீரர் பற்றி சர்ச்சை கருத்து!

0
2048
Ajay jadeja

கேப்டன் ரோகித் சர்மா – தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்தக் கூட்டணி இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் அணுகு முறையை முற்றிலுமாக மாற்றி வருகிறது. இவர்கள் தொலைநோக்கோடு நீண்டதொரு திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள்!

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் இந்திய அணி நிர்வாகத்தின் மீதும் இந்திய அணியின் மீதும் வீரர்களின் மீதும் அதிகப்படியான நெருக்கடி உருவாகியது. இதையெல்லாம் சரி செய்து இந்திய வெள்ளை பந்து அணியை மறுசீரமைப்பு செய்வதற்காக ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி பல பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறது!

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக், ஆர் அஸ்வின் ஆகியோருக்கு இந்திய அணியில் மறு வாய்ப்பு தரப்பட்டு, அவர்கள் சிறப்பாக செயல்படுவதால் அந்த வாய்ப்பு நீட்டிக்கப்படுகிறது. தற்பொழுது ஆசிய கோப்பைக்கான அணியிலும் இந்த இருவரும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரு துறைகளிலும் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் திறமையான பேக்கப் வீரர்களை அணிக்குள் வைத்திருக்க அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே முகமது சாமிக்கு ஆசிய கோப்பையில் இடம் தராது, நல்ல பேக்கப் வீரராக திகழக் கூடிய ஆபீஸ் கானுக்கு அணியில் இடம் தரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து நகைச்சுவையாக இருப்பது போல் தெரிந்தாலும் அது அவ்வளவு நாகரீகமான கருத்தாக இருக்க முடியாது.

- Advertisement -

அவர் கூறியுள்ளதாவது” நீங்கள் ஒரு ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினால், அதற்காக ஒரு அணியை உருவாக்க விரும்பினால், வித்தியாசமாகத்தான் ஏதாவது செய்யவேண்டும். இல்லை விராட் கோலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாடுவதாய் இருந்தால், அந்த அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமுண்டு. ஆனால் நீங்கள் ஒரு புதிய அணுகுமுறையில் ஒரு அணியை உருவாக்க விரும்பும் பொழுது அந்த அணியில் விராட் கோலி இல்லை என்றால் தினேஷ் கார்த்திற்கும் இடம் கிடையாது. அவருக்கு என் பக்கத்து இருக்கையில் தான் இடம் இருக்கிறது. அவர் சிறந்த நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் என்னோடு அமர்ந்து கிரிக்கெட் வர்ணனை செய்யலாம்” என்று சர்ச்சையாய் பேசியிருக்கிறார்!

தினேஷ் கார்த்திக் வெஸ்ட்இண்டீஸ் உடனான டி20 தொடரில் கூட ஒரு அதிரடியான நாற்பத்தி ஒரு ரன்களை விளாசி, தான் எப்படிப்பட்ட வித்தியாசமான ஷாட்களை விளையாடக்கூடிய டி20 அதிரடி பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துக் காட்டி இருந்தார். அவரால் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் உலகின் எந்த பந்துவீச்சாளர்கள் தாக்கங்கள் கொண்டுவர முடியும் என்பது தற்போது நிரூபணமான ஒன்று. இப்படி இருக்க ஜடேஜாவின் இந்தக் கருத்து உண்மையில் வரவேற்க கூடியது இல்லை.