முதல் டி20ஐ போட்டியில் எய்டன் மார்க்கிரமை தேர்வு செய்யவில்லை – காரணம் இதுதான்

0
72
Aiden Markram

கடந்த ஆண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாட தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.

இதற்கு அடுத்து விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியிலும் இருந்து விலக, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். உள்நாட்டில் நியூசிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து வென்றது.

- Advertisement -

பிறகு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் மெகா ஏலத்தோடு, கோவிட் தொற்றைத் தாண்டி இந்தியாவில் நடத்தப்பட, சர்வதேச போட்டிகளிலிருந்து நகர்ந்த இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடினார்கள். மே 29 ஆம் தேதி ஐ.பி.எல் தொடர் முடிவடைந்தது.

இதனையடுத்து உலக கிரிக்கெட் இயல்பு நிலைக்குத் திரும்ப அணிகள் சர்வதேச போட்டிகளுக்குத் திரும்பின. தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்திறங்கியது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா திரும்ப அணிக்கள் வர, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் புதுவாய்ப்பு பெற்றனர்.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டி டெல்லி மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதல் காயத்தால் தொடரை விட்டு விலகி இருந்தார்கள். அதேபோல் தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் முக்கிய வீரரான எய்டன் மார்க்ரம்மிற்கு கோவிட் தொற்று என்று தெரிய வந்துள்ளது அதிர்ச்சியாய் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அவருக்குப் பதிலாய் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தென் ஆப்பிரிக்க தேசிய அணிக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்!