உலக கிரிக்கெட்

என் விஷயத்துல இது விசித்திரமானது.. ஆனா எல்லா புகழும் பவுமாவுக்குதான்.. காரணம் இதான் – மார்க்ரம் பேட்டி

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆட்டநாயகன் எய்டன் மார்கரம் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் ஐசிசி உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது கிடையாது. இந்த நிலையில் முதல் முறையாக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் உலக கோப்பையை வென்று இருக்கிறது.

என் விஷயம் விசித்திரமானது

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற எய்டன் மார்க்ரம் பேசும் பொழுது “முக்கியமான நேரத்தில் என்னால் ரன்கள் எடுக்க முடியாமல் போனது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன பிறகு எனக்கு விஷயங்கள் செட் ஆன விதம் மிகவும் விசித்திரமானது. இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. என்னால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் கொஞ்சம் நேரம் செலவிட முடிந்ததால் ரன்களும் கிடைத்தது. விஷயங்கள் திரும்ப செட் ஆனதில் மகிழ்ச்சி”

“இங்கு கிடைத்த வரவேற்பு என் மனதில் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பொதுவாக லார்ட்ஸ் மைதானம் என்பது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா வீரர்களுக்கும் கனவான ஒரு இடமாகும். இங்கு இறுதிப்போட்டியில் விளையாடுவது மிகச் சிறப்பான விஷயமாகும். தென் ஆப்பிரிக்காவில் இருந்து பல ரசிகர்கள் இங்கு வந்திருந்தார்கள். இதைவிட அதிகமாக வீட்டில் இருந்து பலர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்”

- Advertisement -

பவுமாவே எல்லாத்துக்கும் காரணம்

“நான் விளையாடிய விதம் இருபக்கமும் கூர்மையுடைய வாளைப் போன்றது. ஒருபுறம் கவனமாகவும் விளையாட வேண்டும். இன்னொரு புறம் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கின்ற காரணத்தினால் நம்மால் சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். எனவே அதற்குள் அவர்களிடமிருந்து நாம் ரன்களும் எடுத்தாக வேண்டும். இதற்கு நடுவில்தான் பேட்டிங் செய்தேன்”

இதையும் படிங்க : வேதனையா இருக்கு.. 2 விஷயங்கள் ஜாயிண்ட் ஆகாம போயிடுச்சு.. எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கல – கம்மின்ஸ் வருத்தம்

“உண்மையைச் சொல்லப் போனால் இது பவுமாவிடம் இருந்து வந்த முயற்சிதான். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு முன்னிலையில் இருந்து எங்களை வழி நடத்தி வருகிறார். நேற்று அவர் காயமடைந்த போதும் கூட மைதானத்தை விட்டு வெளியேறவே இல்லை. மேலும் களத்தில் இருந்து ரன்கள் எடுப்பதற்கான வழியை கண்டுபிடித்தார். அவர் ஆடி உள்ள இந்த இன்னிங்ஸ் பலரது நினைவில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts