இந்திய கிரிக்கெட்

எங்கள இந்தியா பரிதாபம் பண்ணிடுச்சு.. நாங்க தோத்ததுக்கு முக்கிய காரணம் இதுதான் – மார்க்ரம் பேட்டி

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாதது தோல்விக்கு காரணம் என தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 74 ரன்கள் மட்டுமே எடுத்து, 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளரும் விக்கெட் கைப்பற்றினார்கள்.

ஹர்திக் பாண்டியா மேஜிக்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அடுத்து இந்திய பவுலர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்கா அணியை 74 ரன்னுக்கு சுருட்டினார்கள். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக குறைந்த ஸ்கோராக பதிவாகியது.

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள எய்டன் மார்க்ரம் கூறும் பொழுது “எங்களுக்கு இந்த போட்டியில் சில நல்ல விஷயங்கள் இருந்தது என்று நான் நம்புகிறேன். அதாவது ஆரம்பத்தில் நாங்கள் பந்துவீச்சில் நல்ல தொடக்கத்தை பெற வேண்டும் என்று நினைத்தோம். எங்களால் இந்த போட்டியில் அதை பெற முடிந்ததில் நாங்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இந்த பெட்டியை டிக் செய்ய நினைத்தோம் அதை செய்திருக்கிறோம்”

- Advertisement -

பரிதாபமாக நடந்து விட்டது

“இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படி நடப்பது சகஜமானதுதான். ஆனால் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தோல்வி முதல் போட்டியிலேயே வந்திருப்பதுதான் பரிதாபமானது. இந்த ஆடுகளத்தில் கடைசி வரையில் டென்னிஸ் பந்து பவுன்ஸ் இருந்து கொண்டு இருந்தது. எனவே பேட்டிங் செய்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனாலும் இதைத் தாண்டி எதிரணிக்கு 10 முதல் 15 ரன்கள் குறைத்து, சரியான முறையில் நாங்கள் விளையாடி இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : 12.3 ஓவர் 101 ரன்.. பும்ரா வரலாற்று சாதனை.. பொட்டலமான தென் ஆப்பிரிக்க அணி.. இந்தியா அபார வெற்றி

“விக்கெட்டுகள் விழும் பொழுது பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக இது குறித்து நாளை ஒரு சிறிய பேச்சு வார்த்தை நடத்துவோம். ஆனால் நாங்கள் இதிலேயே இருக்காமல் அடுத்து என்ன செய்வது என்பது கவனம் செலுத்துவோம். நாங்கள் பாசிட்டிவான விஷயத்தில் ஒட்டிக் கொள்ள விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by