நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அடைக்கும் விதமாக முதல் சுற்று உடன் தோற்று வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை சுற்றிலும் பெரிய விமர்சனங்கள் சூழ்ந்து இருக்கிறது. மேலும் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டின் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். தற்பொழுது இது உண்மை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது சேஷாத் ஆதாரம் இருப்பதாக பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டின் பாகிஸ்தான் அணியில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என்றும், அனைவரும் தனித்தனியே இருக்கிறார்கள் எனவும், மேலும் பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை எனவும் கூறியதை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் அம்பலப்படுத்தினார்.
கேரி கிரிஸ்டன் தோல்விக்குப் பிறகு அணிக் கூட்டத்தில் இதைக் தெரிவித்து இருக்கிறார். மேலும் தன்னுடைய பயிற்சி காலத்தில் அணியில் ஒற்றுமையாக சேர்ந்து விளையாடாத வீரர்கள் விலக்கப்படுவார்கள் என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவருக்கு அத்தகைய சுதந்திரம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கேரி கிறிஸ்டின் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு இது சிறந்த நேரம் என்றும், தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் இருக்க வேண்டாம் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கூறும் பொழுது “நான் தற்பொழுது பாகிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்கள் சிலருடன் பேசினேன். அவர்கள் கேரி கிரிஸ்டன் இவ்வாறு கூறியதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டை, பாகிஸ்தான் அணியின் கடைசிக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆடவே முடியல.. பயிற்சியில் விரக்தி அடைந்த விராட் கோலி.. நாளை அவரை சமாளிப்பாரா? என்ன நடந்தது?
தற்போது அகமது சேஷாத் பயங்கரமாக இதை தெரிவித்திருப்பதன் மூலமாக, கேரி கிரிஸ்டன் வெளிப்படையாகவே பாகிஸ்தான் வீரர்கள் மீது குற்றச்சாட்டை வைத்திருப்பது உறுதியாகி இருக்கிறது. மேற்கொண்டு அவர் என்ன மாதிரி நடவடிக்கையில் இறங்குவார்? இல்லை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவாரா? என்பது தெரியவரும்.