நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில் அந்த அணியின் திட்டம் குறித்து ஜாகிர் கான் பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் மிடில் ஓவர்களில் நியூசிலாந்துக்கு ஸ்பின்னர்கள் நல்ல ரன் கட்டுப்பாட்டை கொடுத்தார்கள். ஆனால் இந்திய ஸ்பின்னர்களால் இதை செய்ய முடியாதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
இந்திய அணிக்கு தோல்வி ஏன்?
இந்த போட்டியில் குறுகிய இடைவெளியில் இந்திய அணி முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டி இருந்ததால் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை தாக்கி ஆட முடியவில்லை.
இதன் காரணமாக பிரேஸ்வெல் மற்றும் லெனாக்ஸ் இருவரும் இந்திய அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி விட்டார்கள். ஆனால் நியூசிலாந்து அணிக்கு விக்கெட் கைவசம் இருந்த காரணத்தினால் இந்திய ஸ்பின்னர்களை சுலபமாக எதிர்கொண்டு ரன்கள் எடுத்து வெற்றி பெற்றார்கள்.
இதுதான் வெற்றிக்கு காரணம்
இதுகுறித்து ஜாகிர் கான் பேசும்பொழுது “நியூசிலாந்து அணியின் டேரில் மிட்சல் குல்தீப் செட்டில் ஆகும் வரையில் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்திய ஸ்பின்னர்கள் செட்டில் ஆகும் வரையில் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அவர் மிக தெளிவாகவும் சத்தமாகவும் சொல்லிவிட்டார். எடுத்ததுமே தாக்கி விளையாடினார்”
இதையும் படிங்க : ஜடேஜா இப்ப இந்திய அணிக்கு தேவையா?.. அந்த இடத்துக்கு இந்த பையன் ரொம்ப சரியா இருப்பானே – ஸ்ரீகாந்த் கருத்து கருத்து
“குல்தீப் வந்து வீச்சை ஆரம்பத்திலேயே தாக்கி விளையாட முடிவு செய்தது திட்டமிடப்பட்டதா என்பதை நியூசிலாந்து நிர்வாகம்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் வரும் வரையில் ஆட்டத்தில் பின்தங்கி தான் இருந்தார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அவர்களை அற்புதமாக கட்டுப்படுத்த ஆரம்பத்தில் வைத்திருந்தார்கள். பிறகு ஸ்பின்னர்கள் வந்த பிறகுதான் அவர்கள் அழுத்தத்திலிருந்து வெளியில் வந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.






