பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்புடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வான் எடுத்த முடிவு மூளை இல்லாதது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக பாகிஸ்தானில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் விளையாடிய இரண்டு போட்டிகளையும் தோற்ற பெண் ஆப்பிரிக்கா வெளியேற மற்ற இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் நேற்று மோதிக்கொண்டன.
ரிஸ்வான் எடுத்தது மூளை இல்லாத முடிவு
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
இது குறித்து பேசி இருக்கும் அகமத் சேஷாத் கூறும் பொழுது “நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று முதலில் பேட்டி தேர்வு செய்தது மூளை இல்லாத முடிவு. ஏனென்றால் அதற்கு முந்தைய போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பந்து நன்றாக கிரிப் ஆகவில்லை. இது தெரிந்தும் அவர் இப்படியான முடிவை எடுத்தது குழந்தைத்தனமானது நம்பவே முடியவில்லை”
சாதாரண அணியை மட்டுமே வெல்லும்
“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாகவே பாகிஸ்தான் அணியின் பலவீனம் மிக வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எதிரணி, சரியான முறையில் விளையாடாமல் போனாலோ இல்லை அந்த அணியின் முக்கிய வீரர் விளையாடாமல் போனாலும் மட்டும்தான் பாகிஸ்தான் அணி எதிரணியை வீழ்த்த முடியும். இல்லையென்றால் முடியாது”
இதையும் படிங்க : விராட் ரோகித் சதம்தான் முக்கியமா?.. நாம நடிகர்கள் கிடையாது இத புரிஞ்சுக்கணும் – அஸ்வின் விமர்சனம்
“பாகிஸ்தான் கேப்டன் ஒவ்வொரு முடிவிலும் மிகவும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார். ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளரை வைத்துக் கொண்டது, வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பாஹிம் அஷ்ரப்பை சேர்த்து பேட்டிங் நீளத்தை அதிகரித்தது என்று எல்லாவற்றிலும் தற்காப்பாக இருக்கவே முயற்சி செய்கிறார். முழுமையான பவுலர் முகமது ஹஸ்னைன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக விளையாடிய பாஹிம் அஷ்ரப் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீச முகமது ரிஸ்வானால் அழைக்கப்பட்டார்” என்று கூறியிருக்கிறார்.






