விராட் ரோகித் சதம்தான் முக்கியமா?.. நாம நடிகர்கள் கிடையாது இத புரிஞ்சுக்கணும் – அஸ்வின் விமர்சனம்

0
265
Ashwin

இந்திய அணியின் முன்னாள் வீர பிரபல சுழல் நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் நடிகர்கள் கிடையாது, இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஊக்குவிக்க கூடாது என அதிரடியாக பேசியிருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் வந்த பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களின் ரசிகர்களாக பெரிய அளவில் மாறி, இந்திய அணியின் வெற்றியைத் தாண்டி தங்கள் விருப்பமான வீரரின் வெற்றி மற்றும் தங்களுக்கு பிடிக்காத வீரனின் தோல்வியை கொண்டாட கூடியவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். இது பெரிய அளவில் ரவிச்சந்திரன் அஸ்வினை வருத்தமடைய வைத்திருப்பதை பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் தனிமனித வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆரம்பத்தில் இருந்தே சினிமா நடிகர்களை பார்ப்பது போல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். கவாஸ்கர், சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என இந்த சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. மற்ற வீரர்களை விட இவர்களே பெரிதும் இந்திய கிரிக்கெட்டின் முகங்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள். மேலும் பந்துவீச்சாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.

இதோடு மட்டும் அல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தவர்கள் ஐபிஎல் தொடர்பு பிறகு வெகுவேகமாக தனி வீரர்களின் ரசிகர்களாக மாறிப் போனார்கள். இதன் காரணமாக ரசிக சண்டை இந்திய கிரிக்கெட்டில் மிக உச்சத்தில் இருக்கிறது. இதை சமூக வலைதளங்களில் வெகு இயல்பாகவே பார்க்கவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் நடிகர்கள் கிடையாது

இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை மிகவும் இயல்பானதாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியம். இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது. நாங்கள் விளையாட்டு வீரர்கள் மட்டும்தான். சினிமா நடிகர்களோ இல்லை சூப்பர் ஸ்டார்களோ கிடையாது. நாங்கள் சாதாரண மக்கள் வெகுவாக இணைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ ஒப்பிடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : 15 இன்னிங்ஸ் வெறும் 37 ரன்.. விராட் கோலி படைக்க இருக்கும் மெகா ரெக்கார்ட்.. மேலும் 2 சாதனைகளை உடைக்க வாய்ப்பு

“உதாரணமாக எடுத்துக் கொண்டால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் கூடுதலாக ஒரு சதம் அடிப்பதால் என்ன அந்த சாதனையில் மாற்றம் வந்துவிடும். இங்கு தனி நபர் சாதனைகள் என்பதை தாண்டி நாம் என்ன இலக்கு வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. எனவே சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டில் இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -