இந்திய கிரிக்கெட்

டீமை செலக்ட் பண்றதுல எனக்கும் டிராவிட்டுக்கும் பிரச்சனை இருந்துச்சு.. அது முட்டாள்தனமா போயிடும் – அகர்கர் பேச்சு

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த காலகட்டத்தில் அணியை தேர்வு செய்வதில் தனக்கும் அவருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இரண்டு ஆசியக் கோப்பைகள், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, மேலும் t20 உலகக்கோப்பை வெற்றி என அஜித் அகர்கர் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது டிராவிட் உடன் தனக்கு எப்படியான உறவு இருந்தது என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

கருத்து வேறுபாடு இருந்தது

இது குறித்து அஜித் அகர்கர் பேசும் பொழுது “ராகுல் டிராவிட் இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்தார். அவர் எனக்கு ஒரு அன்பான நண்பர். ஆனால் எங்களுக்குள் அணியை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடுகள் இருந்தது. நான் அதை மோதல் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் விரும்புவது குறித்து எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால் அது அணியின் நலனுக்காக இருந்தது”

“இறுதியில் நாங்கள் தேர்வுக்கு வரும் பொழுது அனைவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். ஆரம்பத்தில் அனைவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. பிறகு நாங்கள் விவாதங்களில் ஈடுபடுகிறோம். ஆனால் எங்களுக்குள் பெரிய அளவிற்கு எதுவும் வித்தியாசம் இருக்காது. ஆனால் ஒரு இடத்திற்கு பல வீரர்கள் இருப்பதால் இந்த கருத்து வேறுபாடுகள் வருகிறது”

- Advertisement -

அது முட்டாள் தனமானது

“அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இப்போது கில் மற்றும் கம்பீர் என நாங்கள் தொடர்ந்து அவர்களை விவாதங்களில் ஈடுபடுத்தி விவாதித்து முடிவுகள் எடுக்கவும். இவர்களை விவாதங்களுக்கு நீங்கள் அனுமதிக்காவிட்டால் அது முட்டாள்தனமானதாக மாறிவிடும்”

இதையும் படிங்க : என் கேப்டன்சிய புடுங்கி.. கில் கிட்ட குடுத்துடுவாங்கனு பயமா இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை பேச்சு

“இப்போது ஆஸ்திரேலியா தொடரில் நான் வில் மற்றும் கம்பீர் உடன் தொடர்ந்து ஆலோசிப்பேன். அடுத்து தென் ஆப்பிரிக்க தொடர் வர இருக்கிறது. தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. நாம் சரியான அணியை கண்டறியவும் தொடர்ந்து முன்னேறி செல்லவும் ஆலோசனைகளும் விவாதங்களும் முக்கியமாக அமைகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts