இந்திய கிரிக்கெட்

ஐசிசி டி20 ரேங்கிங்.. சூர்யாவை தாண்டிய திலக்.. சாம்சனுக்கு வினோத உயர்வு.. ஹர்திக் பாண்டியா கலக்கல்

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு வெளியிடப்பட்டு இருக்கும் ஐசிசி டி20 ரேங்க் பட்டியலில் இந்திய வீரர்கள் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் தலா இரண்டு சதங்கள் அடித்தார்கள். மேலும் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

சஞ்சு சாம்சனுக்கு வினோத உயர்வு

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மூன்றாவது மற்றும் கடைசி நான்காவது டி20 போட்டியில் அடுத்தடுத்து சதங்கள் அடித்த திலக் வர்மா 69 இடங்கள் முன்னேறி 806 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் கேப்டன் சூரியகுமார் யாதவை தாண்டி வந்திருக்கிறார்.

அதே சமயத்தில் இதே தொடரின் முதல் மற்றும் கடைசிப் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு 17 இடங்கள் உயர்வு கிடைத்து, 22வது இடத்தில்தான் இருக்கிறார். கடைசி ஐந்து போட்டிகளில் மூன்று சர்வதேச டி20 சதங்கள் அடித்து இருந்தும் அவரால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. மேலும் ஜெய்ஸ்வால் 8வது இடத்திலும், ருதராஜ் 15வது இடத்திலும் தொடர்கிறார்கள்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா கலக்கல்

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சர்வதேச டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்து இருக்கிறார். தொடர்ந்து அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாடு டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான முறையில் இருந்து வருகிறது.

தற்போது பேட்ஸ்மேன் களின் விளையாட்டாக இருக்கும் டி20 கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் இருப்பது இந்திய டி20 கிரிக்கெட் ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறது.

இதையும் படிங்க : அந்த 19 நாட்கள் வேலை.. கில் இந்த ஒரு விஷயத்துக்கு பசியோடு வெயிட் பண்றாரு – யுவராஜ் சிங் வெளியிட்ட தகவல்

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியல் :

டிராவிஸ் ஹெட் – 855
பில் சால்ட் – 828
திலகம் வர்மா – 806
சூர்யகுமார் யாதவ் – 788
பாபர் அசாம் – 742
முகமது ரிஸ்வான் – 719
ஜோஸ் பட்லர் – 717
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 706
பதும் நிசாங்க – 672
ரஹ்மானுல்லா குர்பாஸ் – 636

- Advertisement -
Published by