இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்தது. காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது பயிற்சியில் ஈடுபட்டு வரும் முகமது சமி இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.
நடைபெற்று முடிந்த இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே இரண்டு அரை சதங்களுடன் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் என யாருமே பொறுப்புடன் விளையாடவில்லை.
இலங்கை கிரிக்கெட்டில் பெரிய வீரர்கள் இருந்த பொழுது கூட இந்திய அணிக்கு எதிராக 27 வருடங்களாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லாமல் இருந்தார்கள். தற்போது மிகவும் பலவீனமான ஒரு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக தொடரை வென்று 27 வருட பெருமையையும் முடித்து வைத்தது.
இது குறித்து பேசி இருக்கும் முகமது சமி கூறும் பொழுது “சுழல் பந்துவீச்சு வரும் பொழுது இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைய சிக்கல்களை சந்தித்தார்கள். ரோகித் சர்மாவுக்கு பிறகு குறிப்பிடத்தக்க பேட்டிங் செயல் திறன் யாரும் வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். இந்திய அணி 16 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது. ஆனால் தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் இந்திய அணி சுழல் பந்துவீச்சுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது.
இந்திய அணி கவலையுடன் காணப்பட்டது. இந்திய அணியில் பேட்டிங் பற்றி பேசினால் மூன்றாவது இடத்தில் இருந்து லோயர் மிடில் ஆர்டர் வரை யாருமே சரியாக விளையாடவில்லை. ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் போராடினார். அதே சமயத்தில் இலங்கை அணி தங்களுடைய சொந்த கண்டிஷனில் சிறப்பாக விளையாடினார்கள்.
27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது எனவே இது குறித்து பேசினால் நிறைய கேள்விகள் எழும். நீங்கள் உங்கள் திறமையில் மட்டும் விளையாட்டில் கவனம் செலுத்துகிறீர்கள், இப்படி அங்குமிங்கும் ஏதாவது தொடர்கள் வரத்தான் செய்யும். சில நேரங்களில் சிறிய அணிகளுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக தோற்கும் பொழுது அது பெரிய சர்ச்சையாக மாறிவிடுகிறது.
இதையும் படிங்க : ருதுராஜ் வேணுமா?.. கில் செலக்டிங் ஆணி வேர் மாதிரி.. சும்மா அசைச்சு பாக்காதிங்க – அஸ்வின் பேச்சு
இலங்கையில் சிறப்பாக விளையாடி இருக்கிறது, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் இந்திய அணியை பொறுத்தவரையில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இப்பொழுது உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள், உங்கள் திறமையில் கவனம் செலுத்துங்கள். என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.