ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. 2021க்கு பிறகு ரோகித் சர்மா உச்சம்.. 3 இலங்கை வீரர்கள் ஆச்சரியம்

0
123
Rohit

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் 3 இலங்கை வீரர்கள் சிறப்பான நிலைக்கு உயர்ந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை பேட்ஸ்மேன்கள் மூவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கணிசமாக முன்னேறி வந்திருக்கிறார்கள். இது இலங்கை கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2021க்கு பிறகு ரோகித் சர்மா

டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னேறி வந்திருக்கிறார். மேலும் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் இருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து இந்திய பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் 664 புள்ளிகள் உடன் 19 ஆவது இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா 564 புள்ளிகளுடன் 41வது இடத்தில் இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் 514 புள்ளிகள் உடன் 51வது இடத்திலும், அக்சர் படேல் 513 புள்ளிகள் உடன் 52வது இடத்திலும், கேஎல்.ராகுல் 494 புள்ளிகள் உடன் 60வது இடத்திலும் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆச்சரியப்படுத்தும் 3 இலங்கை வீரர்கள்

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 664 19வது இடத்திலும், கேப்டன் தனஞ்செய டி சில்வா 699 புள்ளிகள் உடன் 13வது இடத்திலும், மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்த பதும் நிஷாங்கா 42 இடங்கள் உயர்ந்து 568 புள்ளிகள் உடன் 39வது இடத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் மும்பை அணியில் ரோகித் சர்மா இருக்க மாட்டார்.. இனி எல்லாமே அந்த வீரர்தான் – இந்திய முன்னாள் வீரர் திட்டவட்டம்

கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்த இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பிறகு மிகவும் சிறப்பான முறையில் நம்பிக்கை உடன் விளையாடி வருகிறார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் நல்ல முறையில் முடித்திருக்கிறார்கள். இது டெஸ்ட் ரேங்க் தரவரிசையில் எதிரொலிக்கிறது. அடுத்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன் இன்னும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -