” விராட் கோலி இரவு முழுவதும் பார்ட்டி செய்துவிட்டு அடுத்த நாள் 250 ரன்கள் அடித்தார்” – இஷாந்த் சர்மா வெளியிட்ட வெளியில் தெரியாத சம்பவங்கள்!

0
618
Viratkohli

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோற்று மீண்டும் ஒரு முறை பட்டத்தை இழந்தது!

இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வலது கை வேகப்பந்து இஷாந்த் ஷர்மா வீச்சாளர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

அவருடைய ஆரம்ப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர் பின்பு தன்னை முழுதாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த முறை டெஸ்ட் அணியில் அவர் தேர்வு செய்யப்படாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று தெரிகிறது.

உள்ளூர் போட்டிகளில் டெல்லி மாநில அணிக்காக விளையாடி வந்த இஷாந்த் சர்மா, இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டு அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 115 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

இவர் சிறுவயதிலிருந்து தன்னுடன் சேர்ந்து விளையாடிய தன்னுடைய நண்பனான விராட் கோலி பற்றி கூறும் பொழுது ” விராட் கோலியின் தந்தை இறந்த நாள். அப்பொழுது அவர் சோகமாகவும் தனியாகவும் இருந்தார். எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. ஆனால் அந்த 17 வயதில் அவர் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இப்படி ஒன்று எனக்கு நடந்திருந்தால் நான் நிச்சயம் மைதானத்திற்குள் இறங்கி இருக்க மாட்டேன். அவரால் இது எப்படி முடிந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

- Advertisement -

அவரது எல்லாக் கட்டங்களையும் நான் பார்த்திருக்கிறேன். பார்ட்டி முதல் டாட்டூ வரை, பிட்னஸ் ப்ரீக் முதல் டாப் பெர்பார்மர் வரை, அவர் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

விராட் கோலி அப்பொழுது பார்ட்டிகளை பெரிதும் விரும்புவார். ஒருமுறை கொல்கத்தாவில் நடந்த போட்டியில் அன்றைய இரவு அவர் முழுவதும் பார்ட்டியில் கலந்து கொண்டு, அடுத்த நாள் வந்து ஆட்டம் இழக்காமல் 250 ரன்கள் எடுத்தார். நாங்கள் அப்போது அண்டர் 19 அணிக்காக டெல்லிக்கு விளையாடினோம்!” என்று கூறியிருக்கிறார்!