மும்பை சென்னைக்கு அடுத்து நாங்கதான் ஐபிஎல்-ல கெத்து! – விராட் கோலி சொன்ன காரணம்!

0
216
Viratkohli

இன்று ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் ஐந்தாவது போட்டி மும்பை பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது!

இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு முன்னணி நட்சத்திர வீரர்கள் ஏமாற்றிய போதும் இளம் வீரர் திலக் வர்மா 84 ரன்கள் 46 பந்துகளில் குவித்து அணிக்கு 171 ரன்கள் கிடைக்குமாறு செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் மற்றும் விராட் கோலி இருவரும் அருமையான துவக்கத்தை தந்தார்கள். கேப்டன் பாப் 43 பந்தில் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 49 பந்தில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி
“இது ஒரு அருமையான வெற்றி. சில வருடங்களுக்குப் பிறகு சொந்த மைதானத்திற்கு வந்திருக்கிறோம். இந்த ரண்களை அடித்ததற்கு அங்கீகாரத்தை பேட்டர்களுக்கு தர வேண்டும். திலக் வர்மா அருமையாக பேட்டிங் செய்தார். எங்களை நாங்களே பேக் செய்து கொண்டோம். பாப் முதலில் அட்டாக் செய்தார். பின்பு நான் இணைந்து கொண்டேன். இன்றைய விஷயங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. புதிய பந்தில் விளையாடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் நாங்கள் இறங்கி அடித்து அவர்களின் இன்டென்சிட்டியை எடுத்து விட்டோம்.இது ஒரு நல்ல விக்கெட். நாங்கள் சிறப்பான பகுதிகளில் விளையாடி எதிரணி பந்துவீச்சாளர்கள் மேல் பிரஷர் போட்டோம்!” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசும் பொழுது
” பெங்களூர் கூட்டம் அற்புதமானது. இது மிகப்பெரிய கூட்டம். ஒவ்வொரு இருக்கையும் முழுமையாக இருந்தது. இங்கு எங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எங்களுக்குப் பின்னால் இருந்து கூட்டம் எங்களுக்கு தீவிரமாக செயல்படும் உந்துதலை தந்து கொண்டே இருந்தது!” என்று கூறினார்!

- Advertisement -

கரண் சர்மா வந்து வீழ்ச்சி பற்றி பேசிய அவர் ” அவர் சிறந்தவர். அவர் இடது கை பேட்ஸ்மேன் அவுட் ஆக்கிய விதம் சிறப்பானது. அவருடைய பந்துவீச்சு கடந்த வருடமும் சிறப்பாகத்தான் இருந்தது. வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசினார். அவரை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து ஃப்ரெண்ட் புட்டில் விளையாட இழுத்துக் கொண்டே இருந்தார். தற்பொழுது முதல் போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரின் சிந்தனை பற்றி பேசிய அவர் ” மும்பை ஐந்து முறையும் சென்னை நான்கு முறையும் கோப்பையை வென்று இருக்கிறது. ஆனால் நாங்கள் தொடர்ந்து சீரான செயல்பாட்டின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை வந்திருக்கிறோம். இதனால் நாங்கள் தொடர்ந்து சீரான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இது கவனம் பற்றியது மற்றும் தொடர்ந்து சமநிலை உள்ள அணியை கொண்டு விளையாடுவது பற்றியது. நாங்கள் இதே மொமெண்டத்தில் விளையாட வேண்டும். நாங்கள் கொஞ்சம் சிறப்பாக எக்ஸ்க்யூட் செய்ய வேண்டும்!” என்று கூறி முடித்திருக்கிறார்!