எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்வின் மீண்டும் பந்துவீச்சு தரவரிசையில் சாதனை!

0
747
Ashwin

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது!

இந்தத் தொடரில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை அபாரமாக வீழ்த்தி தொடரில் அசைக்க முடியாத முன்னிலையை பெற்றிருந்தது!

- Advertisement -

நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்!

இதற்கு அடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் லபுசேன் மற்றும் ஸ்மித் இருவரது விக்கட்டையும் கைப்பற்றி ஆஸ்திரேலியா ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் தலா மூன்று விக்கட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து அஸ்வின் 14 விக்கெட்டுகளை குவித்து டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸை கீழ் இறக்கி இங்கிலாந்தின் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறினார். தற்பொழுது அவரை முந்தி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதித்திருக்கிறார்!

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் டாப் 10 பந்துவீச்சாளர்கள்:

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 864 புள்ளிகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 859 புள்ளிகள்
பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 858 புள்ளிகள்
ஜஸ்ட்பிரிட் பும்ரா இந்தியா 795 புள்ளிகள்
ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் 787 புள்ளிகள்
ஒலி ராபின்சன் இங்கிலாந்து 785 புள்ளிகள்
ககிசோ ரபாடா தென் ஆப்பிரிக்கா 776 புள்ளிகள்
ரவீந்திர ஜடேஜா இந்தியா 763 புள்ளிகள்
கைல் ஜேமிஷன் நியூசிலாந்து 757 புள்ளிகள்
மிட்சல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 735 புள்ளிகள்