ஐபிஎல்

2வது கோப்பையை எடுத்து வைங்க.. நாங்க வந்துட்டு இருக்கோம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பின் ஆர்சிபி கேப்டன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஆனது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இதன் முதலாவது குவாலிபயர் போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் அதன் கேப்டன் ராஜத் பட்டிதார் போட்டி குறித்து சில முக்கிய விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பட்டிதார் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் என 93 ரன்கள் குவித்தார். மற்றும் விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணி, பெங்களூர் வீரர்களின் சிறப்பான பவுலிலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மற்றொரு வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் போட்டி குறித்து பேசிய கேப்டன் பட்டிதார் எங்கள் உடல் மொழி எதிரணிக்கு பயம் கொடுக்க வேண்டும் என்கிற முறையில் சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டி எங்களுக்கு ஒரு மிகச் சிறந்த ஆட்டமாக அமைந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் உறுதியான நோக்கத்தோடு பந்துகளை அடித்த விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. நாங்கள் உங்களைத் தாக்க வருகிறோம் என்கிற ரீதியில் ஆன உடல் மொழியை நீங்கள் காட்ட வேண்டும். அது உண்மையில் இந்த ஆட்டத்தில் எல்லா பேட்ஸ்மேன் இடமும் இருந்தது.

அதனால் நல்ல உடல் மொழியை பேணுவது குறித்து நாங்கள் உரையாடினோம். அதனால் இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் அனைவருமே தாக்குதல் மனப்பான்மையை கடைப்பிடித்து அற்புதமாக விளையாடினார்கள்” என்று பாராட்டி பேசி இருக்கிறார். இதன் மூலமாக பெங்களூர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by