அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் – இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்று கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை

0
132
Hardik Pandya with IPL Trophy

2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தற்பொழுது அகமதாபாத்தில் கோலாகலமாக பிரம்மாண்டமான நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் விளையாடிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கில் 45 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வின்னிங் ரன்னை சிக்ஸர் மூலமாக கில் எட்டினார். இதுவரை நடந்த எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் வின்னிங் ரன்னை எந்த ஒரு வீரரும் சிக்ஸர் மூலமாக எடுத்ததில்லை. அந்த சாதனைக்கு தற்போது கில் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து அறிமுக தொடரிலேயே கோப்பை வென்ற கேப்டன்

ஹர்திக் பாண்டியா குஜராத்தில் பிறந்த விரல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த ஆண்டு வரை விளையாடி வந்தார். 2015,2017,2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றபோது இவர் முக்கிய வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு குஜராத் அணிக்கு கேப்டனாக களமிறங்கி தன்னுடைய முதல் ஐபிஎல் சீசனில் தனது அணிக்காக கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். இதற்கு முன் ரோஹித் ஷர்மா 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தன்னுடைய முதல் ஐபிஎல் சீசனில் (கேப்டனாக) கோப்பையை கைப்பற்றி கொடுத்திருந்தார். அதேபோல 2015ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்பொழுது இன்று இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். தற்பொழுது ரோஹித் ஷர்மாவின் 2 சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேப்டனாக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் :

2009 : அனில் கும்ப்ளே, 2015 – ரோஹித் ஷர்மா, 2022 : ஹர்திக் பாண்டியா

2017 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மும்பை மற்றும் சென்னை அணிகள் மட்டுமே மாற்றி மாற்றி கோப்பையை வென்று வந்தன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ஆறாவது ஆண்டில் ஒரு புதிய அணி கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் குஜராத் அணியில் விளையாடிய 8 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கின்றனர். குஜராத் அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதே கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தில் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் குஜராத் அணி கோப்பையை வென்றுள்ளது.