ஐபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் அரைசதம் பதிவானது!

0
175
Gurbaz

ஐபிஎல் 16வது சீசனில் ஒன்பதாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்பொழுது நடந்து வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணிக்கு வழக்கம் போல் துவக்கம் இந்த முறையும் மாறியது ஆனால் அது பயனளிக்கும் வகையில் இல்லை. வெங்கடேஷ் முதல் விக்கட்டாக மூன்று ரன்களில் வில்லி பந்தில் வெளியேற, அடுத்த பந்திலையே மூன்றாவது விக்கட்டுக்கு வந்த மந்திப் சிங் வெளியேறினார். இதற்கடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

- Advertisement -

விக்கட்டுகள் இப்படி ஒரு புறம் சரிந்து கொண்டு இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரகமனுல்லாஹ் குர்பாஷ் ஆரம்பம் முதலில் வழக்கம்போல் தைரியமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும். 44 பந்துகளை சந்தித்த அவர் 57 ரன்னில் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட போய் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் என்று ரஷித் கான் பதிவு செய்து இருந்தார். தற்பொழுது இதை கொல்கத்தாவுக்காக விளையாடும் ரகமனுல்லாஹ் குர்பாஷ் தாண்டி அசத்தியிருக்கிறார்!

- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்திய இளம் வீரர்களுக்கு மட்டுமல்லாது இந்தியா தாண்டி கிரிக்கெட் விளையாடும் சிறிய நாடுகளில் உள்ள திறமையாளர்களையும் கண்டுபிடித்து வாய்ப்பு தந்து, அவர்களுக்குப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது. இதேபோல் அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!