127 ரன்.. அல்லா கசன்பர் 18 வயதில் சாதனை.. ஜிம்பாப்வே ஒயிட் வாஸ்.. ஆப்கான் அணி அபார வெற்றி

0
438
Afghanistan

ஜிம்பாப்வே அணி தங்களது சொந்த மண்ணில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்து ஒயிட் வாஸ் ஆகியது.

தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு சென்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒயிட் வாஸ் செய்திருக்கிறது. அடுத்து இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

பரிதாபமாக சுருண்ட ஜிம்பாப்வே

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த சீன் வில்லியம்ஸ் மற்றும் தாக்குப் பிடித்து விளையாடிய 61 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி 30.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் ஒரு வீரர் 60 ரன் தனியாக எடுக்க, இதற்கு அடுத்து பத்து வீரர்களும் சேர்ந்து அந்த அணிக்கு 67 ரன்கள் மட்டுமே வந்தது. மேலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அல்லா கசன்பர் பத்து ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அல்லா கசன்பரின் சாதனை

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 84 ரன்கள் வந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்த அப்துல் மாலிக் 66 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ரஹமத் ஷா 17, கேப்டன் ஷாகிதி 20 மற்றும் செடியுல்லாஹ் அடால் 52 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் 26.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்தத் தொடரின் மூன்று போட்டிகளையும் வென்று ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஸ் செய்தது.

இதையும் படிங்க : 97 பந்தில் 201 ரன்.. சமீர் ரிஸ்வி மாஸ் பேட்டிங் சாதனை.. சிஎஸ்கே தவறு செய்து விட்டதா?

இந்த போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய அல்லா கசன்பர் 5 விக்கெட் கைப்பற்றியதின் மூலம் 18 வயதில் 2 முறை வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்திருப்பார்.

- Advertisement -