சையது முஸ்தாக் அலி டிராபி.. 17 பேர் கொண்ட மாஸான தமிழக அணி அறிவிப்பு.. கலக்கப்போகும் நட்சத்திர வீரர்கள்

0
1345

இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபி வருகிற 23ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தமாக 38 அணிகள் பங்கு பெறுகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் பங்கு பெறும் தமிழக அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

சையது முஸ்தாக் அலி டிராபி

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு தொடரான சையது முஸ்தாக் அலி டிராபியின் 17-வது சீசன் இந்த மாதம் 23ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள 38 அணிகள் மொத்தமாக 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக திரிபுரா, சிக்கிம், பரோடா, குஜராத், கர்நாடகா, சௌராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பங்கு பெறுகின்றன. இதில் தமிழக அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் என்ற தமிழக அணி இந்த சீசனில் பங்கு பெற உள்ள நிலையில் இதற்கான 17 பேர் கொண்ட அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் டிஎன்பிஎல் புகழும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் நட்சத்திர வீரரான ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக அதே ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடும் சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். பேட்டிங் வரிசையில் விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் பாபா இந்திரஜித் முக்கிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

17 பேர் கொண்ட தமிழக அணி அறிவிப்பு

மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் கலக்கி வரும் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தமிழக அணியில் இணைய உள்ளார். மேலும் சாய் கிஷோர், சித்தார்த் மணிமாறன் போன்ற முக்கிய வீரர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியாக தமிழக அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க:ரோஹித் கம்பீர் என்ன செய்றீங்க.. பிசிசிஐ பிளேயர்ஸ்க்கு இதை செய்றது நியாயமே இல்லை – சுனில் கவாஸ்கர் பேட்டி

சையது முஸ்தாக் அலி டிராஃபியில் விளையாட உள்ள 17 பேர் கொண்ட தமிழக அணி: ஷாருக்கான் (கேப்டன்), சாய் சுதர்சன் (விசி), விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன்பால், பூபதி வைஷ்ண குமார், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், ஜெகதீசன் (விகீ), இந்திரஜித் பி, ரித்திக் ஈஸ்வரன் (விகீ), சாய் கிஷோர், சித்தார்த் எம், வருண் சிவி, சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், முகமது.

- Advertisement -