153 ரன்.. சிக்கந்தர் ராஸா போராட்டம் வீண்.. ரஷித் கான் நவீன் அசத்தல்.. ஆப்கான் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது

0
793
Afghanistan Cricket

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக 1-1 என சமன் செய்திருக்கிறது.

தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணி வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான அணி தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

மீண்டும் ஏமாற்றிய நட்சத்திர வீரர் குர்பாஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் போட்டியில் ஏமாற்றம் தந்த நட்சத்திர வீரர் குர்பாஸ் இந்த போட்டியிலும் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் செடியுல்லாஹ் அடால் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து தர்வீஷ் ரசூல் 42 பந்தில் 58 ரன், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 23 பந்தில் 28 ரன், குல்பதின் நைப் ஆட்டம் இழக்காமல் இருபத்தி ஒரு பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் க்வாண்டு மற்றும் ரியான் பர்ல் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

நம்பிக்கை தராத டாப் ஆர்டர்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாட வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் மட்டும் டாப் ஆர்டரில் தாக்குப் பிடித்து விளையாடி 26 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் 10.5 ஓவரில் 57 ரன்னுக்கு ஜிம்பாப்வே அணி முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

தையும் படிங்க: மற்ற டீம் மாதிரி.. சிஎஸ்கே என்ன இதை செய்ய சொல்லல.. அதனாலதான் என் ஆட்டம் மாறுச்சு – அஜிங்கியா ரகானே பேட்டி 

தற்கு அடுத்து கேப்டன் சிக்கந்தர் ராஸா ஒரு முனையில் போராடி 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி இறுதியில் 17.4 ஓவரில் 103 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. அந்த அணியின் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் மற்றும் ரசீத் கான் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -