“நாங்க ஜெயிச்சதுக்கு அழுத பையன் ஆப்கானிஸ்தான் கிடையாதுங்க!” – சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்த முஜிப்!

0
434
Mujeep

இந்தியாவில் தற்பொழுது நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சுவாரசியத்தை ஆப்கானிஸ்தான் பெரிய அளவிற்கு எடுத்துச் சென்று இருக்கிறது!

நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதான வெற்றியை நடப்பு உலக சாம்பியனுக்கு எதிராக பெற்று அசத்தியது.

- Advertisement -

இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய எல்லா அணிகளுக்குமே திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நடப்பு உலகக் கோப்பை தொடர் சற்று சுவாரசியமாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அரசியலாக உள்நாட்டில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. சமீபத்தில் அந்த நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள்.

இப்படியான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உலக சாம்பியனுக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் பெற்ற வெற்றி என்பது, அந்த மக்களின் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியை கொண்டு வரக்கூடியதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இப்படியான வெற்றிகள் உலகக் கிரிக்கெட்டுக்கும் மிகவும் முக்கியமானது. இந்த வெற்றி ஆப்கானிஸ்தானில் இன்னும் இளைஞர்களை கிரிக்கெட் நோக்கி கொண்டு வருவதற்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

இந்த போட்டியின் போது டெல்லி மைதானத்தில் ஒரு சிறுவன் ஆப்கானிஸ்தான் வென்ற பின்பு உணர்ச்சிவயத்தில் அழ, அவனை முஜீப் மைதானத்திற்கு உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார். இது அப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலானது. எல்லோரும் அந்தச் சிறுவனை ஆப்கானிஸ்தான் என்று நினைத்தார்கள். தற்போது இதுகுறித்து ஆச்சரியமான ஒரு விஷயத்தை முஜீப் பகிர்ந்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அந்தச் சிறுவன் ஆப்கானிஸ்தான் கிடையாது. அவன் இந்தியாவைச் சேர்ந்த சிறுவன். அவன் எங்களுடைய வெற்றியில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாக இருக்கிறான். இந்தியாவைச் சேர்ந்த இந்த சிறுவனை நேற்று சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு உணர்வு.

அந்த இரவில் இரவு எங்களுக்காக ஆதரவளித்த அத்தனை ரசிகர்களுக்கும் எங்களுடைய நன்றி.உங்களுடைய அன்பும் ஆதரவும் மிகவும் மகத்தானது. இதை மீண்டும் பெறுவதற்கு எங்களால் காத்திருக்க முடியாது. அன்புக்கு நன்றி டெல்லி!” என்று கூறியிருக்கிறார்!