தன்னை தானே ரன் அவுட் செய்த ஆப்கான் வீரர்.. கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. தென் ஆப்பிரிக்கா தொடர்

0
3188
Rahmat shah

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன் ரஹ்மத்ஷா அவுட் ஆன விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

துபாய் ஷார்ஜாவில் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் குர்பாசை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் அப்துல் மாலிக் 9 ரன்களும், மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ரஹ்மத் சா ஒரு ரன்னிலும், கேப்டன் ஷாகிதி 10 ரன்னிலும், வெளியேற மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினார். இதில் அல்லாஹ் கஜன்ஃபார் மட்டும் ஓரளவு நன்றாக விளையாடி 15 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 31 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 94 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸ் என 89 ரன்கள் குவித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 34 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது. இதில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ரஹமத்ஷா ஆட்டமிழந்த விதம் தற்போது வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரின் ஐந்தாவது பந்தை இங்கிடி வீச அதை எதிர்கொண்ட குர்பாஸ் அந்தப் பந்தை நேராக அடித்தார்.

அது இன்கிடியின் கைகளில் சென்று எட்ஜ் ஆகி நான் ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன் ரஹமத் ஷா மீது பட்டு ஸ்டம்ப்களை தாக்கியது. இதனால் ஒரு ரன்னில் எதிர்பாராத ரன் அவுட்டால் ரஹ்மத் ஷா ஏமாற்றமான முறையில் தானே ரன் அவுட் செய்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:நான் பங்களாதேஷ் அணிக்கு ஃபீல்டிங் செட் பண்ண காரணம்.. அந்த முன்னாள் இந்திய வீரர்தான் – ரிஷப் பண்ட் பேட்டி

தற்போது பேட்டிங் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி 26.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 52 ரன்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -