ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தொடரையும் கைப்பற்றியுள்ளது.
துபாயில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஷ் மற்றும் சர்தான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் இப்ராகிம் சர்தான் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். இன்னொரு சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் விளாசினார்.
இதற்குப் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களில் கேப்டன் சகிதி 69 ரன்களும், ஆல்ரவுண்டர் முகமது நபி 48 ரன்களும் குவித்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் அடர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு 77 ரன்களில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நல்ல நிலையில் இருந்த போது கேப்டன் ஸ்டெர்லிங் 50 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இவரை முகமது நபி வீழ்த்த, ஒன் டவுனில் களம் இறங்கிய மற்றொரு ஆட்டக்காரர் கேம் பெயரை 43 ரன்களில் கரோட்டி வெளியேற்றினார். அதாவது 22 வது ஓவர் வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் குவித்திருந்த அயர்லாந்து அணி, 26 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அதன் பின்னர் மொத்தமாக 119 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அயர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. சுழலுக்கு சாதகமான மெதுவான இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சுழலில் சிக்கிய அயர்லாந்து அணி வீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடையை கட்டினர்.
இந்த ஆடுகளத்தில் ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே இரண்டு வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முகமது நபி 10 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று ஓவர்கள் மீதமுடன் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் முகமது நபி தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: டி20 உலககோப்பை.. ஐபிஎல் 2024-ல் எதிர்பார்க்கப்படும் 5 இந்திய ஃபாஸ்ட் பௌலிங் ஆல் ரவுண்டர்கள்
பின்னர் தனது அறிமுக போட்டியில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் கரோட்டி ஒன்பது ஓவர்கள் பந்து வீசி நான்கு ஓவர் மெய்டனுடன் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற நிலையில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.