டி20 உலககோப்பை.. ஐபிஎல் 2024-ல் எதிர்பார்க்கப்படும் 5 இந்திய ஃபாஸ்ட் பௌலிங் ஆல் ரவுண்டர்கள்

0
6554
Dube

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் சரியான வீரர்கள் தேவைப்படுவார்கள். பேட்டிங் இல்லை பவுலிங் என ஏதாவது ஒன்றில் மிகத் திறமையாக இருக்கும் வீரர்கள் மட்டுமே வாய்ப்பு பெறுவார்கள்.

அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் என்பது ஆல் ரவுண்டர்களுக்கான கிரிக்கெட் ஆக மாறி வருகிறது. இதன் மூலம் அதிக பவுலிங் ஆப்ஷன்களை வைப்பது கேப்டனுக்கு பவுலிங் ரொட்டேட் செய்ய வசதியாக அமைகிறது. மேலும் பெரிய அளவில் பேட்டிங் லைன் அப் இருக்கும்பொழுது, ஆரம்பத்திலிருந்து அடித்து விளையாடுவதற்கு வசதியாக அமைகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ஃபாஸ்ட் பவுலிங் இந்திய ஆல்ரவுண்டர்கள் ஐந்து பேர் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

தீபக் சகர் :

இவர் தன்னுடைய மாநில அணியான ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரராகவும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக இறுதிக்கட்டத்தில் விளையாடி காட்டி இருக்கிறார். புதிய பந்தில் சிறப்பாக வீசக்கூடியவர் என்பதால், பேட்டிங்கும் செய்யக் கூடியவர் என்பதால் டி20 உலக கோப்பைக்கு இவர் மீது ஒரு கண் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர் :

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேடில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அதே ஆண்டு அங்கு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா காயம் இருந்த போதிலும் வந்த காரணத்தினால் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அதற்குப் பின்பு இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்று விளையாடியிருக்கிறார். பந்துவீச்சிலும் சில விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

சிவம் துபே :

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வாவதற்கு அதிகபட்ச வாய்ப்பில் இவர் இருக்கிறார். காரணம் இவர் மிடில் ஓவர்களில் வீசப்படும் சுழற் பந்துவீச்சை தாக்கி விளையாடும் திறமை பெற்று இருக்கிறார். எனவே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்களில் இவர் தேவைப்படுவார். மேலும் இவரை இந்தியத் தேர்வுக்குழு ரேடாரில் வைத்திருப்பதால் டி20 அணியில் எடுப்பதோடு பந்து வீசவும் வாய்ப்பு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷல் படேல் :

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு மிகவும் நம்பிக்கையான மிடில் மற்றும் டெத் ஓவர் வீரர் பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டார். மேலும் இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர். இவர் அதிகப்படியான மெதுவான பந்துகளை வீசுகின்ற காரணத்தினால் பந்துவீச்சில் சில சரிவுகளை சந்தித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை கழட்டி விட, பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை வாங்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : WPL 2024.. ஆர்சிபி ப்ளே ஆப்-க்கு தகுதி.. எல்லீஸ் பெரி ஆல்ரவுண்டிங் அசத்தலில் மும்பை இந்தியனஸ் தோல்வி

சர்துல் தாக்கூர் :

தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சி சீசனில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சதம் மற்றும் அரை சதம் மும்பை அணிக்காக அடித்து பெரிய கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அதே சமயத்தில் பந்து வீச்சிலும் அதிரடியாக விக்கெட் கைப்பற்றி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இவர் தற்போது சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று ஐபிஎல் தொடரில் பார்க்க வேண்டும்.

- Advertisement -