சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக திட்டம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா போட்டி
ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பெரிய ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி, இந்த முறையும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தங்களது முன்னேற்றத்தை காண்பித்துள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற காத்திருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெறும் நிலையில் இருந்தும் மேக்ஸ் வெல்லின் அதிரடியான இரட்டை சதத்தால் தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியா அணி வரலாற்று வெற்றியை பெற்றது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் சாகிதி மேக்ஸ்வெல்லுக்கு எதிராக விளையாட மட்டுமே நாங்கள் வருகிறோம் என்று நினைத்தீர்களா? அது வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே என்று சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
ஒருவருக்காக நாங்கள் வரவில்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் மேக்ஸ் வெல்லுக்கு எதிராக மட்டும் விளையாட வருவோம் என்று நினைத்தீர்களா? நாங்கள் அனைத்து ஆஸ்திரேலியா அணிக்கும் திட்டமிடுகிறோம். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது வரலாற்றின் ஒரு பகுதியாகும். அதற்குப் பிறகு நாங்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்திருக்கிறோம்.
இதையும் படிங்க:சிஎஸ்கே வருது.. நீங்களும் வாங்க.. சென்னை அணியை சுட்டிக்காட்டி.. ரசிகர்களை இழுக்க டிராவிட் புது ப்ளான்.. முழு விபரம்
நாங்கள் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சிந்திக்கிறோம். தனிப்பட்ட வீரர்கள் மட்டுமே சிந்தித்து நாங்கள் மைதானத்திற்கு வருவதில்லை. சரியான திட்டத்தோடு வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மேக்ஸ்வெல் என்கிற ஒற்றை நபருக்காக மட்டும் வரவில்லை அனைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நாங்கள் வருகிறோம்” என்று பேசி இருக்கிறார். அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இரண்டும் கடுமையான போட்டி போடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமான விருந்தாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.






