ஏசியன் கேம்ஸ்.. 9 ரன் தாண்டாத 7 பேர்.. பரிதாபமாக வெளியேறிய இலங்கை அணி.. செமி பைனல் சென்ற ஆப்கானிஸ்தான்.!

0
6271

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கு பெற்று பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 161 தங்கப்பதக்கங்கள் 90 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 47 வெண்கல பதக்கங்களுடன் 297 பதக்கங்களைப் பெற்று சீனா முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியா இதுவரை 15 தங்கப் பதக்கங்கள் 26 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 28 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 69 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்த வருட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெற்றிருக்கிறது. டி20 ஃபார்மெட்டில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்று அர இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன. கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் முகமது ஷேசாத் 20 ரண்களும் ஷஹீதுல்லா 23 ரண்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். நூற அலி சத்ரான் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்பரன்களிலேயே வெளியேறினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷாரா 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சஹான் ஆராச்சிங்கே 26 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தினர். இதன் பிறகு 117 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆப்கானிஸ்தான் அணியின் அசத்தலான பந்துவீச்சில் சீட்டுக்கட்டுகளைப் போல விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

- Advertisement -

இலங்கை அணியின் கேப்டன் சஹான் ஆராச்சிங்கே அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்தபடியாக லசித் குரூஸ்புள்ளே 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 19.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குல்பதின் நைப் மூன்று விக்கெட்டுகளையும் கைஸ் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் சரபுதீன் அஸரப், ஜாகீர் கான் மற்றும் கரீம் ஜன்னத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று நடைபெற இருக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மலேசிய அணிகள் இன்று மோத இருக்கின்றன. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நான்காவது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.