75 ரன்னில் நியூசிலாந்தை சுருட்டிய ஆப்கானிஸ்தான்.. ரஷித் கான் வரலாற்று சாதனை.. 9 பேர் ஒற்றை இலக்கம்

0
305
Afghanistan

இன்று டி20 உலக கோப்பையில் சி பிரிவில் இடம் பெற்று இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிக்கொண்ட போட்டி வெஸ்ட் இண்டீஸ் கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 75 ரன்கள் அனுபவம் மிக்க நியூசிலாந்து அணியை சுருட்டி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ரகமனுல்லா குர்பாஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் வந்த அஸமத்துல்லா ஓமர்சாய் 13 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த யாரும் பெரிய ரன்களுக்கு செல்லவில்லை. 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. போல்ட் மற்றும் ஹென்றி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். கான்வே 10 பந்தில் எட்டு ரன் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து வில்லியம்சன் 9, டேரில் மிட்சல் 5 ரன் என வரிசையாக வெளியேறினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 18 பந்தில் 18 ரன், மேட் ஹென்றி 17 பந்தில் 12 ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணியில் 9 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். அந்த அணி பதினைந்து புள்ளி இரண்டு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்களுக்கு அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரூக்கி மற்றும் ரஷித் கான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : நாளை பாகிஸ்தான் போட்டிக்கு.. தரமான உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய மாற்றம் நடக்குமா?

இந்த போட்டியில் ரஷீத் கான் 17 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதுவே டி20 உலக கோப்பையில் ஒரு அணியின் கேப்டனின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்த முதல் வெற்றியும் இதுதான். நியூசிலாந்தை வீழ்த்தியதால் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் கைகள் ஓங்கி இருக்கிறது. இதே பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -