நாளை பாகிஸ்தான் போட்டிக்கு.. தரமான உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய மாற்றம் நடக்குமா?

0
4313
ICT

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நியூயார்க் நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு எது வலிமையான இந்திய பிளேயிங் லெவனாக இருக்கும்? என்று பார்க்கலாம்.

நியூயார்க் ஆடுகளத்தை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு என இரண்டுக்குமே சாதகங்கள் உண்டு. இதன் காரணமாகவே இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவையும் வைத்துக்கொண்டது.

- Advertisement -

இப்படி வேகப்பந்து வீச்சுக்கு மட்டும் ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கின்ற காரணத்தினால், குல்தீப் யாதவ் போன்ற பிரதான சுழல் பந்துவீச்சாளர் எடுத்துக் கொண்டு வராமல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல் கவுண்டர்களை வைத்து, இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் வரிசையை 8 வரையில் நீளமாக்கிக் கொண்டது.

தற்போது அக்சர் படேல் ல் பவர் பிளேவில் பந்து வீச முடியும் என்பதாலும், அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பெரிய பந்துவீச்சில் வேலைகள் இல்லை என்பதால், அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என்கின்ற பேச்சுகளும் எழுந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இதே போல் பேட்டிங் வரிசையை எட்டு வரையில் வைத்துக் கொண்டு, ஹர்திக் பாண்டியா நல்ல நிலையில் பந்துவீச்சு இருப்பதால், முகமது சிராஜ் இடத்தில் குல்தீப் யாதவை கொண்டு வரலாம் என்கின்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு மாற்றங்களையும் இந்திய அணி நிர்வாகம் செய்வது கடினம். எனவே அயர்லாந்து அணிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட அணியே பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறங்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் உடன் எனக்கு பிரச்சனையா.. நாங்க பேசறது இல்லையா?.. மவுனம் கலைத்த ரிஷப் பண்ட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங்.

- Advertisement -