பங்களாதேசை பந்தாடி ஆசிய கோப்பையில் அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்!

0
171
Afghanistan

15வது ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் சூரிய மைதானம் ஆன சார்ஜா மைதானத்தில் மோதின!

இந்தப் போட்டியும் ஆசிய கோப்பை தொடரில் ஒரு முக முக்கியமான போட்டி தான். காரணம் என்னவென்றால், இலங்கை உடன் ஆப்கானிஸ்தான் மோதிய முதல் போட்டியில் மிகபெரிய வெற்றியை ஆஃப்கானிஸ்தான் அணி பெற்றிருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி மிகப் பெரிய அளவில் ரெண்டரை பெற்று இருந்தது. சமயத்தில் இலங்கை அணி மிக மிக மோசமான ரன் ரேட்டில் இருந்தது.

- Advertisement -

இதனால் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றால் ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் தானாக அடுத்த சுற்றுக்கு உள்நுழையும் நிலைமை இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி வென்றால் பங்களாதேஷ் இலங்கை அணிக்கு நடக்கும் போட்டியில் யார் பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த சுற்றுக்கு நுழையும் நிலை இருந்தது. எனவே இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அணிக்கும்மே மிக முக்கியமான போட்டி ஆகும்.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆச்சரியப்படும் விதமாக தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

பங்களாதேஷ் அணி கேப்டன் இந்த முடிவு எவ்வளவு தவறானது என்று அடுத்து பவர் பிளே முடிவதற்குள் தெளிவாக தெரிந்தது. பவர் பிளேவில் ஓவர்களை வீசிய முஜிபூர் ரகுமான் வெறும் 9 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய சரிவை உண்டாக்கினார்.

- Advertisement -

அதற்கடுத்து இணைந்த ரசித்தான் விழுந்த பங்களாதேஷ் அணியை நிமிரவே விடவில்லை. அவர் பங்கிற்கு அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணியை சாய்த்தார். அழைக்கப்பட்ட 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 127 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியின் மோசடேக் உசைன் முப்பத்தி ஒரு பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 14 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை மட்டுமே எடுத்து மிகவும் நிதானமாக ஆடி ஏறக்குறைய தோல்வியின் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சட்ரான் வேறொரு ரூபத்தில் விளையாடி பங்களாதேஷ் அணியின் அடுத்த சுற்று கனவை இந்த ஆட்டத்தில் தகர்த்து வெறும் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி 6 சிக்சர்களோடு 41 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அடுத்த சுற்றுக்கு உறுதியாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு இன்னும் நீடிக்கிறது. அடுத்து இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் யார் பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். தற்போது இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் ரசிகர்களை மட்டுமல்ல இலங்கை அணியின் ரசிகர்களையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது!