“ஆப்கான் டி20 சீரிஸ்.. உலக கோப்பை டீம் செலக்சனுக்கு ஹெல்ப் பண்ணாது” – பார்த்திவ் படேல் பேச்சு

0
48
Patel

தற்பொழுது இந்தியாவில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நடைபெறும் முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

கடந்த 14 மாதங்களாக இந்திய t20 அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா காயத்தில் இருக்கின்ற நேரத்தில், பழைய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் விராட் கோலியின் டி20 அணிக்குள் வரவழைக்கப்பட்டார்.

- Advertisement -

இதே காரணத்தால் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு வாய்ப்பு பெற்ற சிவம் துபே மிகப்பெரிய நம்பிக்கையை தனது சிறப்பான செயல்பாட்டின் மூலமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் கேப்டனுக்கு கொடுத்து வருகிறார். இவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் புறக்கணிப்பது சற்று கடினமான காரியம்.

நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளையும் இந்தியா அணி வென்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி விட்டது.இன்று மூன்றாவது போட்டி நடைபெற இருக்கும் நிலையில், வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள கேப்டன் ரோஹித் சர்மா இன்று ஓய்வு எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். ஏனென்றால் அவர் விளையாடிய இரண்டு போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். எனவே அவர் ரன் கணக்கை துவங்குவதற்கு விளையாட வேண்டும். ஆனால் இதுவெல்லாம் உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்ய எந்த தாக்கத்தையும் உருவாக்காது என்று பார்த்திவ் படேல் கருதுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்தத் தொடரை டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் தொடராக நான் பார்க்கவில்லை. யார் சிறப்பாக செயல்பட்டாலும் படாவிட்டாலும் அது உலகக் கோப்பை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை.

குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி பேசும் பொழுது, அவர்கள் டி20 இந்திய அணியில் இடம் பெற்றதுமே, அவர்கள் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறப் போகிறார்கள் என்பது முடிவாகிவிட்டது.

ரோகித் சர்மாவை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் ரன்கள் எடுக்க விரும்புவார். அவர் முதலில் அதிரடியாக விளையாடி ஒரு தொனியை அமைக்கவே நினைப்பார். அவர் எப்பொழுது உள்ளே நுழைந்து விளையாடினாலும் கிடைக்கும் ரன்னை பெரிதாக மாற்ற முயற்சி செய்வார்” என்று கூறியிருக்கிறார்.