அதிரடி காட்டிய ஆப்கன் வீரர்; ஆசியக் கோப்பையில் அபார சாதனை!

0
126
Sl vs Afg

15வது ஆசியக் கோப்பையில் தற்போது முதல் சுற்று முடிவடைந்து, ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இரண்டாவது சுற்றாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன!

ஆசிய கோப்பையில் இன்று சூப்பர் 4 சுற்றில் சார்ஜா மைதானத்தில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். முதல் சுற்றில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவரில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதன்படி ஆப்கானிஸ்தான் இன்னிங்சை பேட்டிங்கில் துவங்க ஹஸரத்துல்லாஹ் ஷசாய், ரகமன்னுல்லாஹ் குர்பாஷ் இருவரும் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தார்கள். இதில் ஷசாய் ஆட்டத்தின் 5-வது ஓவரில் மதுசங்கா பந்துவீச்சில் பதினாறு பந்துகளுக்கு 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து கிளீன் போல்டாகி வெளியேறினார்.

ஆனால் இன்னொரு முனையில் நின்ற குர்பாஷ் தீக்ஷனா ஓவரில் பவுண்டரி எல்லையில் கேட்ச்சில் பிடிபட்டு, ஆனால் பீல்டர் காலை பவுண்டரி லைனில் மிதித்ததால் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்து இலங்கை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நான்கு புறங்களிலும் அடித்து நொறுக்கினார்.

அந்த கண்டத்தில் தப்பிய அவர் அதற்கடுத்து 2 சிக்சர்களை விளாசினார். நிலைத்து நின்று விளையாடியவர் 22 பந்துகளில் அரைசதத்தை எட்டி ஆசிய கோப்பையில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த அரைசதத்தில் மூன்று பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடக்கம்.

- Advertisement -

இப்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். ஆனால் வலிமை அதிகமான இலங்கை அணியுடன் ஆப்கன் வீரர் குர்பாஷ் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பையில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்கள்:

ரகமன்னுல்லாஹ் குர்பாஷ் – இலங்கை- 22 பந்துகள்
சூரியகுமார் யாதவ் – ஹாங்காங் – 22 பந்துகள்
பாபர் ஹயாத் – ஓமன் – 24 பந்துகள்