களத்தில் மோதிக்கொண்ட ஆப்கன் பாகிஸ்தான் வீரர்கள் – வீடியோ இணைப்பு பரபரப்பு சம்பவம்!

0
153
Afg vs pak

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை தொடரில், ஒவ்வொரு போட்டிகளுமே பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றன. ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையும் எல்லைமீற செய்கின்றன. தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதிக்கொண்ட போட்டியில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது!

இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதிக்கொண்ட போட்டி மிக முக்கியமான போட்டியாகும். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேறும். அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பில் இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இரு அணிகளும் சார்ஜா மைதானத்தில் இன்று மோதிக்கொண்டன. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி பவர் பிளேவில் நன்றாக விளையாடினாலும், அதற்கடுத்து அவர்களால் பாகிஸ்தான் பந்து வீச்சை குறிப்பாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சை ஆட முடியவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இப்ராகிம் சட்ரண் 37 பந்துகளுக்கு அடித்த 35 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள்.

இதையடுத்து 130 ரன்களை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களில் கேப்டன் பாபரை ரன் இல்லாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் வெளியேற்றினார்கள். இதை அடுத்து சிறிது நேரம் தாக்குப் பிடித்த ரிஸ்வானும் கிளம்பினார். இதற்கடுத்து சிறிது நேரம் சதாப் கான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் அதிரடியில் ஈடுபட்டு பின்பு வீழ்ந்தனர்.

கடைசி கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தியதோடு பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 ஓவர்களுக்கு 21 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை வீசிய பரீத்தி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, மிக முக்கிய விக்கெட்டா
ன பாகிஸ்தானின் ஆசிப் அலியின் விக்கெட்டை வீழ்த்தி, அவரது முகத்திற்கு நேரே கையை உயர்த்தி கொண்டாடினார். இதனால் இருவருக்குள்ளும் உரசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிப் அலி பேட்டை அடிப்பதுபோல் உயர்த்த, பரீத்தி அடித்து பார் என்பது போல் நெஞ்சை நிமிர்த்த, களத்தில் ஆக்ரோஷமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடுவர்களும் வீரர்களும் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை பரூக்கி வீச, பாகிஸ்தானின் 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் நதிம் ஷா முதல் இரண்டு பந்துகளையும் தூக்கி சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியை கம்பீரமாக வெல்ல வைத்து, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேற்றினார்.