சதம் அடிச்சாருனு புகழாதீங்க.. அந்த தம்பி ஏலம் நடக்கும் போதே இந்த ரெக்கார்டு வெச்சுட்டுதான் வந்திருக்காரு – சுனில் கவாஸ்கர்

0
230

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி குறித்து இந்திய முன்னாள் நட்சத்திர பேட்மேன் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அபார திறமை கொண்ட சிறுவன்

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் அதிகபட்சமாக 68 ரன்கள், ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் 53 ரன்கள், சூரியகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்கள் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்தனர்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயது இளம் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி தனது இரண்டாவது பந்தில் தீபக்சஹாரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 117 ரன்களில் ஆட்டம் இழந்தது. குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அவர், இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து புகழ்ந்து பேச வேண்டாம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” அதாவது பாருங்கள் அவர் ஐபிஎல் மெகா ஏலத்திற்குள் நுழைந்து போதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். நல்ல பந்துவீச்சுக்கு எதிராக அவர் இந்த சிறப்பான சாதனையை படைத்திருத்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு 13 வயது திறமையான இளைஞன், சர்வதேச அணிக்கு எதிராக சதம் அடித்திருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமாகும்.

இதையும் படிங்க:17-11.. மும்பை மற்றும் சூர்யாவின் வரலாற்று பிரமாண்ட சாதனைகள்.. ஆர்சிபி-க்கு நடந்த பரிதாபம்.. புது மாற்றங்கள்

அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார். எனவே அவரை வானளாவ புகழ்ந்து பேசக் கூடாத ஒருவர் என்று நான் நம்புகிறேன். அவர் தனது ஆட்டத்தை இன்னும் வளர்த்துக்கொண்டு சிறப்பாக செயல்படுவார்” என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் அவரது கோச் ட்ராவிட் உடன் அமர்ந்து தனது இன்னிங்ஸை எப்படி நிதானப்படுத்துவது என்பதை அவர் கற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -