3 நாளில் 2 சதங்கள்.. ஜோ ரூட் 2 சரித்திர சாதனை.. லார்ட்ஸ் மைதானத்தில் புது வரலாறு.. இலங்கை 2வது டெஸ்ட்

0
349
Root

இங்கிலாந்தின் தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து இரண்டு சரித்திர சாதனைகள் படைத்திருக்கிறார்.

நேற்று முன்தினம் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என அறிவித்தது. மேலும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

ஜோ ரூட் முதல் சதம்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 143 ரன்கள் குவித்தார். எட்டாவது வரிசையில் வந்த வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கிட்சன் 118 ரன்கள் அவர் பங்குக்கு குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாளில் 427 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி இரண்டாவது நாளிலேயே 196 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

ஜோ ரூட் இரண்டாவது சதம்

நேற்று இரண்டாவது நாளில் 25 ரன்னுக்கு இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் 37 மற்றும் ஜேமி ஸ்மித் 26 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.

இது அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34வது சதமாக அமைந்தது. மேலும் இந்த சதத்தின் மூலம் அலைஸ்டர் குக் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்டில் அதிக சதம் அடித்திருந்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். மேலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2017 ரன்கள் தாண்டி, இந்த உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதையும் படிங்க :

இறுதியாக ஜோ ரூட் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -