நேற்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து தற்பொழுது ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்தியா காஷ்மீரில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கை கொடுக்காமல் சென்ற விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
பாகிஸ்தான் புகார்
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஐசிசி இடம் புகார் அளித்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. மேலும் இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கையை இந்திய அணி மீது எடுக்கலாம் என யோசித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மேன் மொஹ்சின் நக்வி கூறும்பொழுது “ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட் ஸ்பிரிட் தொடர்பான எம்சிசி சட்டங்களில் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று நடந்த நிகழ்வு கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இவரை நீக்குங்கள்
இந்த நிலையில் நேற்று இந்திய அணி நடந்து கொண்டதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போட்டி நடுவரை உடனடியாக ஆசிய கோப்பை தொடரை விட்டு நீக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போர்க் கொடி தூக்கி இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிய வரும்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025.. இது பாகிஸ்தான் அணியே கிடையாது.. கவாஸ்கர் கண்டனம்
ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்னொரு முறை மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் 99 சதவீதம் இருக்கிறது. மேலும் அப்பொழுதும் இந்திய அணி இப்படியே நடந்து கொள்ளுமா? இல்லை முடிவை மாற்றிக்கொண்டு வழக்கம் போல் மரபு படி செயல்படுமா? என்கின்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






