நியூஸி டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் ஓய்வு.. இந்திய அணிக்கு இன்னொரு சிக்கல்

0
623
England

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒய்வில் செல்ல இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்துக்கும் இந்திய அணிக்கும் முக்கியமான தொடர்

தற்பொழுது நியூசிலாந்தின் இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் பெரிய சிக்கல்கள் உருவாகும்.

தற்போது இப்படியான சூழலில் அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியில் இளம் அதிரடி விக்கெட் கீப்பரான ஜேமி ஸ்மித் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வில் சென்று இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணிக்குமே ஒரு பின்னடைவான விஷயமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இளம் வீரருக்கு வாய்ப்பு

இந்த நிலையில் இங்கிலாந்து 19 வயது அணியில் இடம் பெற்று இருந்த ஜேக்கப் பெத்தேல், இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முதல்முறையாக அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : 307-2.. WTC பைனல் இந்தியாவுக்கு நெருக்கடி தரும் தென் ஆப்பிரிக்கா அணி.. பங்களாதேஷ் 2வது டெஸ்ட்

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைசன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாக் க்ராலி, பென் டக்கெட், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

- Advertisement -