ஐபிஎல் 2024

9வது இடத்தில் பேட்டிங் வந்த தோனி.. இதுதான் காரணமா?.. உண்மை தெரிந்து சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் ஆறு வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் வாய்ப்பில் அருகில் இருக்கிறது. இந்த நிலையில் கடைசி போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் வந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இருந்தது. இந்த நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பிட்ட அந்த போட்டியில் தோனி பேட்டிங் வரிசையில் சர்துல் தாக்கூருக்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்தார். மேலும் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமும் இழந்தார். இது சிஎஸ்கே ரசிகர்களின் தரப்பில் ஏமாற்றத்தை தந்தாலும் கூட பெரிய விமர்சனமாக மாறவில்லை.

அதே சமயத்தில் இது வெளியில் பெரிய விமர்சனமாக உருவெடுத்தது. குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஒன்பதாவது இடத்தில் தான் தோனி பேட்டிங் செய்வார் என்றால் அவர் சிஎஸ்கே அணிக்கு தேவையே கிடையாது, அதற்கு பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கலாம் என்று கூறியிருந்தார்.

மேலும் சில முன்னாள் வீரர்களும் தோனி சீக்கிரத்தில் குறிப்பிட்ட போட்டியில் பேட்டிங் வரிசையில் மேலே வந்திருக்க வேண்டும் என கூறியிருந்தார்கள். தற்பொழுது அதற்கான உண்மையான காரணம் வெளிவந்திருக்கிறது. அந்த காரணம் விமர்சனத்தை முறியடித்தாலும் கூட சிஎஸ்கே ரசிகர்களை வருத்தப்பட வைப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவருக்கு முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் சரியாகினாலும் கூட, தசை கிழிவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரால் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓட முடியாது. அப்படி அவர் ஓடினால் அவருடைய காயம் பெரியதாக மாறும். இதன் காரணமாகவே ஓடி ரன் எடுக்க தேவையில்லாத கடைசி ஓவர்களில் அவர் பேட்டிங் செய்ய வருகிறார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தரப்பிலிருந்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : தல தோனியால் கூட இத கற்றுத் தர முடியாது.. ஹர்திக் பாண்டியா வித்தியாசமான பேச்சு.. ரசிகர்கள் ஆதரவு

மேலும் சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே காயம் அடையாமல் இருந்திருந்தால், தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் அணியில் இருந்தாலும் ஓய்வு எடுக்க சிந்தித்தார் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கான்வே இல்லாத நிலையில் தன்னுடைய பங்களிப்பு அணிக்கு தேவை என்பதால் காயத்தையும் சுமந்து கொண்டு அணிக்காக தோனி விளையாடி வருகிறார்” என்று தெரிய வருகிறது.

Published by
Tags: CSKDhoni