ஷமி எப்போது ஆஸ்திரேலியா செல்கிறார்?.. அகர்கர் வித்தியாசமான முடிவு.. வெளியான தகவல்கள்

0
1246
Shami

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமியை அனுப்புவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பது குறித்து? புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் பும்ரா, சிராஜ் ஹர்ஷித் ராணா மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணி வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

முகமது ஷமி பிட்னஸ்

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு வருடமாக முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் மறுவாழ்வில் இருந்து வந்தார். இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி உடல் தகுதியை நிரூபித்தார்.

இந்த நிலையில் உடனடியாக அவரை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க இந்திய தேர்வுக்குழு முடிவு செய்யவில்லை. மேலும் பெங்கால் அணிக்காக சையத் முஸ்டாக் அலி டிராபியில் அவரை விளையாட வைத்திருக்கிறார்கள். அவர் இந்த தொடரில் ஒரு போட்டியில் மூன்று விக்கெட் கைப்பற்றியும் இருக்கிறார். அவரது உடல் தகுதி திருப்தி அளிக்கும் விதமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அகர்கர் வித்தியாசமான முடிவு

இந்த நிலையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் முகமது ஷமியை அவசரமாக ஆஸ்திரேலியா அனுப்பி வைப்பதற்கு விரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அகர்கர் முகமது ஷமி விஷயத்தில் பொறுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதல் இன்னிங்ஸ் 5.. இரண்டாவது இன்னிங்ஸ் 100.. கோலி இப்படி ஆட அதுவே காரணம் – கவாஸ்கர் பேட்டி

இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் வெளியான செய்தியில் “முகமது ஷமியை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பும் விவகாரத்தில் இன்று வரை எந்தவித உரையாடலும் நடைபெறாமல் இருந்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே ஷமி விஷயம் குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -