பயமா எனக்கா?.. ருதுராஜ் நடுவுல அதை சொன்னார்.. என் பேட்டிங் பிளான் இதுதான் – அபிஷேக் சர்மா பேட்டி

0
1795
Abhishek

இன்று ஜிம்பாவை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் விளையாடியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடி சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். போட்டிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் தன்னுடைய பேட்டிங் பாணி பற்றி பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 46 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்தியர் மற்றும் குறைந்த போட்டியில் டி20 கிரிக்கெட் சதம் அடித்த இந்தியர் என்கின்ற சாதனைகளை இந்த போட்டியில் படைத்தார்.

- Advertisement -

இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில் ஆட்டம் இழந்துவிட்ட நிலையில், அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 47 பந்தில் 77 ரன்கள், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள்.

தொடர்ந்து விளையாடிய ஜிம்பாபே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மாதவேரே மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி முதல் போட்டிகள் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா பேசும்போது “இது என்னுடைய சிறப்பான ஆட்டம் என்று நினைக்கிறேன். நேற்று நாங்கள் சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. இன்று என்னுடைய நாள் என்று நான் உணர்ந்தேன். நான் அதை மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். மேலும் டி20 கிரிக்கெட் என்பது வேகம் பற்றியானது. வேகத்தை நான் இறுதிவரை எடுத்துச் சென்றேன். நான் சிறப்பாக விளையாடியதற்கு பயிற்சியாளர் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் ஒரு காரணம்.

இதையும் படிங்க: 100 ரன்கள்.. சாதனை வெற்றி.. ஜிம்பாப்வே அணியை பழி தீர்த்து.. இந்தியா உலக சாம்பியன் என்று நிரூபித்தது

ஒரு இளைஞனாக நீங்கள் உங்களுடைய நாள் என்று உணர்ந்தால், நீங்கள் உங்களை வெளிப்படுத்தி தைரியமாக விளையாட வேண்டும். நானும் ருதுராஜும் ஒவ்வொரு பந்துக்கு இடையிலும் பேசிக்கொண்டோம்.அவர் என்னிடம் நீங்கள் அடித்து விளையாடி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நான் எப்பொழுதும் என்னுடைய திறமையை நம்புகிறேன். என்னுடைய ஆர்க்கில் பந்து இருந்தால், அது முதல் பந்தாக இருந்தாலும் தைரியமாக அடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -